சன்னியின் "பிங்க் லிப்ஸ்" கன ஜோர்... பார்த்து ரசித்த 10 லட்சம் பேர்....!
மும்பை: சன்னி லியோன் வர வர ரசிகர்களின் மனங்களை ரொம்பத்தான் வாட்டி வதைக்கிறார்.. அவர் ஒரு படத்தில் ஆடியுள்ள பிங்க்லிப்ஸ் என்ற குத்துப் பாட்டுக்கு செமத்தியான வரவேற்பு கிடைத்துள்ளதாம் யூடியூபில்.
இதுவரை அந்தப் பாடலை 10 லட்சம் பார்த்துப் பார்த்து ரசித்துள்ளனராம். ரசிகர்களின் ஆர்வம் கரைபுரண்டோடுவதால் படக் குழு ஹேப்பியாக காணப்படுகிறது.
சன்னி லியோன் நடித்துள்ள ஹேட் ஸ்டோரி 2 படத்தில்தான் இந்த குத்துப் பாட்டு வருகிறது. இப்போது பாட்டு செம ஹீட்டாகவும், ஹிட்டாகவும் மாறியுள்ளதால் படமும் நல்ல வசூலைத் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ஹேட் ஸ்டோரி 2 தயாரிப்பாளர்கள்.

ஜூலை 2ல் அப்லோட்
இந்தப் பாடல் ஜூலை 2ம் தேதி அப்லோட் செய்யப்பட்டது. இதுவரை 10லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

மீட் பிரதர்ஸ்.. உமா கைதி
மீட் பிரதர்ஸ் போட்ட இசைக்கு உமா - கைதி நடனம் அமைத்துள்ளனர்.

பெஸ்ட் டான்ஸ்....
இந்தப் பாடலில் சன்னி லியோனின் டான்ஸ் பெஸ்ட்டாகவும், பிரமாதமாகவும் வர வேண்டும் என்பதற்காக டான்ஸ் மாஸ்டர்கள் உமாவும், கைதியும் ரொம்பவே மெனக்கெட்டனராம். சும்மா சொல்லக் கூடாது. டான்ஸும் சரி, சன்னியும் சரி ரொம்பவே லவ்லியாக வந்திருப்பதால் அனைவருமே மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பேபி டாலை விட சூப்பர்
இதற்கு முன்பு பேபி டால் என்ற பாட்டுக்கு சன்னி ஆடியிருந்ததை விட இந்தப் பாட்டு செம ஹிட்டாகியுள்ளதாம்.

சுர்வீன் சாவ்லா
சுர்வீன் சவ்லா, ஜெய் பனுசாலி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் ஜூலை 18ம் தேதி தியேட்டர்களுக்கு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











