சன்னியின் இந்தப் பாடலைப் பார்த்து எத்தனை தேவதாஸ்களின் மனசு 'பிரேக்' ஆகப் போகிறதோ....!
மும்பை: கரண்ட் தீகா படத்தில் சன்னிலியோன் ஆடியுள்ள ஒரு பாடல் காட்சியை ஒன்றரை கோடி ரூபாய் செலவில் படமாக்கியுள்ளனராம்.
முன்னாள் நீலப்பட நடிகை என்ற அடையாளத்துடன் பாலிவுட்டில் நுழைந்தவர் சன்னிலியோன். இவர் நாயகியாகத்தான் அறிமுகமானார். ஆனால் அதை மட்டும் நம்பினால் சரிவராது என்பதால் கவர்ச்சிகரமான ஒற்றைப் பாடல்களுக்கும் குத்தாட்டம் போட்டு வருகிறார்.
தமிழில் கூட வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

பிரேக் - அப்...
அந்தவகையில், ‘கரண்ட் தீகா' என்ற படத்தில் ‘தேவதாஸ் பிரேக் -அப்' என்ற பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார் சன்னி லியோன்.

ஒன்றரை கோடி ரூபாய்...
இப்பாடலைப் படமாக்குவதற்கு செட் மற்றும் பிற செலவுகள் சேர்த்து மொத்தம் பட்ஜெட் ஒன்றரை கோடி ரூபாயைத் தொட்டு விட்டதாம்.

17ம் தேதி ரிலீஸ்...
மஞ்சு மனோஜ் மற்றும் ராகுல் பிரீத் சிங் நாயகன் நாயகியாக நடித்துள்ள இப்படம் இம்மாதம் 17ந்தேதி ரிலீசாக உள்ளது.

முன்கூட்டியே ரிலீஸ்...
பட ரிலீசிற்கு முன்னதாகவே சன்னிலியோன் நடனம் ஆடியுள்ள பாடலை மட்டும் தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீஸ் செய்து பரபரப்பை கிளப்ப படத்தயாரிப்பு திட்டமிட்டுள்ளதாம்.
இந்தப் பாடலைப் பார்த்து எத்தனை தேவதாஸ்களின் மனங்கள் பிரேக் அப் ஆகப் போகிறதோ....!


Click it and Unblock the Notifications











