»   »  தமிழில் பேசிய சன்னி லியோன்... புதுப் பட டைட்டில் அறிவிப்பு #Veeramadevi #SunnyLeoneInTamil

தமிழில் பேசிய சன்னி லியோன்... புதுப் பட டைட்டில் அறிவிப்பு #Veeramadevi #SunnyLeoneInTamil

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழில் பேசி அசத்திய சன்னி லியோன்-வீடியோ

சென்னை : வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் நடிகை சன்னி லியோன்.

ஆபாசப் படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சன்னி லியோன் தற்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, பாலிவுட்டில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் தமிழில் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 'வீரமாதேவி' என இந்தப் படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.

தமிழில் சன்னி லியோன்

தமிழில் சன்னி லியோன்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் ஒரு சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் முன்னாள் ஆபாசப் பட நடிகை சன்னி லியோன். இந்தப் படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.

போர்ன் நடிகை இல்லை

போர்ன் நடிகை இல்லை

இந்தப் படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சன்னி லியோன். இந்தப் படத்தின் மூலம் சன்னி லியோன் மீதிருக்கும் ஆபாசப் பட நடிகை என்கிற பிம்பம் நிச்சயம் மாறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

பிப்ரவரியில் ஷூட்டிங்

பிப்ரவரியில் ஷூட்டிங்

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2018 பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் நாசர், நவ்தீப் ஆகியோர் நடிக்கின்றனர். சரித்திரப் படமாக உருவாகும் இப்படத்தில் சன்னி லியோன் 'வீரமாதேவி' கேரக்டரில் நடிக்கிறார்.

வீரமாதேவி

இந்தப் படத்தின் டைட்டில் டிசம்பர் 27 அன்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த அறிவிப்பே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆனது.

செல்ஃபி சேலஞ்ச்

இன்று பிற்பகலில் சன்னி லியோன் நடிக்கும் பட டைட்டிலின் பிற்பாதி பெயரை வெளியிட்டு முதல்பாதியையும் சரியாகக் கணிக்கும் ரசிகர்கள் சன்னி லியோனுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சைட்டில் சேலஞ்ச்

சைட்டில் சேலஞ்ச்

இதையடுத்து ட்விட்டரில் ரசிகர்கள் இந்த டைட்டிலை கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தனர். இதனால், #SunnyLeoneInSouth, #SunnyLeoneInTamil ஆகிய ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகின.

சன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி

சன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி

இந்நிலையில், இப்படத்திற்கு 'வீரமாதேவி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சன்னி லியோன் ஒரு வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். இந்த டைட்டிலை பல ரசிகர்கள் முன்பே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் பேசிய சன்னி

தமிழில் பேசிய சன்னி

"வணக்கம் தமிழர்களே, நான் வீரமாதேவியாக உங்களைச் சந்திக்கப் போறேன்.." என தமிழில் அறிவித்துள்ளார் சன்னி லியோன். தமிழ் தெரியாமல் அவர் கொஞ்சலாக இதை அறிவித்திருக்கிறார்.

English summary
Actress Sunny Leone is acting as heroine in new Tamil movie titled 'Veeramadevi'. Sunny Leone has released this announcement as a video tweet. "Hello Tamilians, I'm going to meet you as Veeramadevi..." Sunny Leone said in Tamil in that video. Watch video here...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X