»   »  மாமியார் கேட்டுக்கிட்டே இருக்காங்களாம்: விரைவில் தாயாக சன்னி லியோன் திட்டம்

மாமியார் கேட்டுக்கிட்டே இருக்காங்களாம்: விரைவில் தாயாக சன்னி லியோன் திட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை சன்னி லியோன் விரைவில் தாயாக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாராம்.(ரொம்ப முக்கியம் என்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்கிறது)

சன்னி லியோன் அவர் பாட்டுக்கு வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். மேலும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கி தனது கணவர் டேனியல் வெபருடன் சேர்ந்து ஆபாச படங்களை தயாரித்தும் வந்தார்.

இந்நிலையில் தான் நடிகையும், இயக்குனருமான பூஜா பட் சன்னி லியோனை பாலிவுட்டுக்கு அழைத்து வந்தார்.

ச்ச்சீ

ச்ச்சீ

சன்னி லியோன் நடித்த முதல் இந்தி படமான ஜிஸ்ம் 2வை பார்த்தவர்கள் அவருக்கு நடிக்கவே தெரியவில்லை என்றும், அவர் மீண்டும் வெளிநாட்டிற்கே சென்று ஆபாச படங்களிலேயே நடிக்கலாம் என்றும் விமர்சித்தனர்.

நாங்களும் நடிப்போம்ல

நாங்களும் நடிப்போம்ல

தன்னை பலரும் விமர்சித்ததை பார்த்த சன்னி நானும் நடித்துக் காட்டுகிறேன் பாருங்கள் என்று சபதம் செய்து மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் இன்று வரை அவர் தனது படங்களில் 'அந்த' உணர்ச்சி தொடர்பான முகபாவனையை தான் காட்டுகிறார் என்கிறார்கள் விமர்சகர்கள்.

குழந்தை

குழந்தை

பாலிவுட்டில் செட்டில் ஆகியுள்ள சன்னிக்கு தாயாகும் ஆசை வந்துள்ளது. மாமியார் வேறு எப்பொழுது பேரக் குழந்தையை பெற்றுத் தரப் போகிறாய் என்று கேட்கிறாராம். அதனால் விரைவில் தாயாக திட்டமிட்டுள்ளார் சன்னி.

திட்டம்

திட்டம்

நானும், டேனியலும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறோம். அதற்கான நேரத்தை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதற்கிடையே படப்பிடிப்புகளில் வேறு பிசியாக உள்ளேன் என்கிறார் சன்னி லியோன்.

English summary
Actress Sunny Leone is all set to have her first baby with husband Daniel Webber soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil