Sunny Leone - அட சன்னி லியோன் ஆரம்பித்திருக்கும் தொழில் இதுவா?.. 1000 ரூபாய் இருந்தால் போதும்.. செம விஷயம்
மும்பை: நடிகை சன்னி லியோன் உலக அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர். பஞ்சாபி தம்பதிக்கு கனடாவில் பிறந்த அவர் ஆபாச நடிகையாக முதலில் அறியப்பட்டார். பிறகு அதிலிருந்து ஒதுங்கிய சராசரியான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது அவர் புதிய தொழில் ஒன்றையும் தொடங்கி கலக்கியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் செம தொழிலா இருக்கே என்று கூறி வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.
பஞ்சாபி தம்பதிக்கு கடந்த 1981ஆம் ஆண்டு கனடாவில் பிறந்தவர் சன்னி லியோன். ஜெர்மன் பேக்கரியில் வேலை பார்த்துவந்த அவருக்கு ஆபாச படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் நடித்ததால் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆனார். அதேசமயம் அவர் மீது பலரும் வேறு விதமான பார்வைகளையே வைத்திருந்தனர். ஒருகட்டத்தில் ஆபாச திரைப்பட உலகில் இருந்து ஒதுங்கிய சன்னி லியோன் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் திரைப்படங்களில் நடிக்க வந்தபோதும் அவர் மீது விமர்சனத்தையே முன்வைத்தனர்.

கலங்காத சன்னி: இருந்தாலும் சன்னி லியோன் அதனை பார்த்து கலங்கவில்லை. 2011ஆம் ஆண்டு ஹிந்தி பிக்பாஸில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் மீது வைக்கப்பட்டிருந்த வேறு விதமான பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு ஜிஸ்ம் 2வில் நடித்தார். அதிலும் கவர்ச்சி கதாபாத்திரமே ஏற்றிருந்தார். மேலும் அந்தப் படத்துக்கு ஏராளமான ஹிந்தி பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதனையும் சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர்.
வரிசையான படங்கள்: முதல் படத்தில் நடித்து முடித்த பிறகு அவருக்கு ஜாக்பாட், ஷூட் அவுட் அட் வதாலா, ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி, ஏக் பஹேலி லீலா, குச் குச் லோச்சா ஹை, ஒன் நைட் ஸ்டாண்ட் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் அவர் நடிக்க நடிக்க அவர் மீது இருந்த ஆபாச நடிகை என்ற முத்திரை முற்றிலுமாக விலக தொடங்கியது.
மற்ற மொழிகளில் சன்னி லியோன்: ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி தமிழில் முதன்முறையாக, வடகறி திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அவர் நடனம் ஆடுகிறார் என்பதே அந்தப் படத்துக்கு பெரிய விளம்பரமாக இருந்தது. அந்தப் படத்துக்கு பிறகு ஓ மை கோஸ்ட், தீ இவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்ததாக கொட்டேஷன் கேங் வீரமாதேவி உள்ளிட்ட படங்களிலும் நடித்துவருகிறார்.
சன்னி லியோனின் தொழில்: இந்நிலையில் சன்னி லியோன் புதிய தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதன்படி நடிப்பதில் சம்பாதிக்கும் பணத்தை ஹோட்டல் தொழில் முதலீடு செய்திருக்கிறார். Chica Loca என்கிற பெயரில் தொழில் தொடங்கியிருக்கும் அவர், பலவகையான வெரைட்டி சாப்பாடுகளை கொடுக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் ஒரு ஆள் 1000 ரூபாய் செலுத்தினால் அனைத்து உணவுகளும் அன்லிமிடெட்டாக கிடைக்கும் என தெரிவித்திருக்கிறார்.
சன்னி லியோன் குடும்பம்: முன்னதாக சன்னிலியோன் டேனியல் வெபர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் கடந்த 2011ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடந்தது. அந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். சினிமாவிலும், பிஸ்னெஸ்ஸிலும் எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் தனது கணவர் மற்றும் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும் என்பதில் சன்னி லியோன் கவனமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











