சன்னி லியோனின் முதல் குத்துப் பாட்டு...!
அவர் எதைச்செய்தாலும் பரபரப்புதான், ஒரு கிளுகிளுப்புதான். பாலிவுட்டில் நடிகையான அவர் தற்போது முதல் முறையாககுத்துப் பாட்டுக்கு ஆடியிருப்பது பரபரப்பாகியுள்ளது.
ஜிஸ்ம் படம்தான் சன்னியின் முதல் படம். ஹீரோயினாக அதில் நடித்திருந்தார். ஆனால் படம் ஊத்திக் கொண்டது. இதனால் புதிய பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை. இந்த நிலையில்தான் வந்தது குத்துப் பாட்டுக்கான வாய்ப்பு. லைலா படத்தில் அவர் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார். இதுதான் அவர் ஆடிய முதல் குத்துப் பாட்டாகும்.
இந்தப் பாடலுக்கான ஷூட்டிங்கின்போது அனைவரையும் அதிர வைத்து விட்டதாம் சன்னியின் ஆட்டமும் கவர்ச்சியும். அதி வேகமான இசையுடன் கூடிய இந்தப் பாடலில் ஜான் ஆப்ரகாம், துஷார் கபூர் ஆகியோருடன் இணைந்து ஆடியுள்ளார் சன்னி.
இதுதொடர்பான ஒரு வீடியோ லிங்க்கையும் தனது டிவிட்ரில் தட்டிவிட்டுள்ளார் சன்னி. அதில் தன்னை விட ஜான் ஆப்ரகாமும், துஷாரும் சிறப்பாக ஆடியதாக புகழாரம் சூட்டியுள்ளார் சன்னி.


Click it and Unblock the Notifications












