»   »  சன்னி லியோன் பக்கத்தில் நிற்கத் தயங்கியது ஏன்? பிரியங்கா சோப்ரா விளக்கம்

சன்னி லியோன் பக்கத்தில் நிற்கத் தயங்கியது ஏன்? பிரியங்கா சோப்ரா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: விருது வழங்கும் விழாவில் சன்னி லியோன் பக்கத்தில் நிற்கத் தயங்கியது குறித்த தனது செயலுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா விளக்கம் அளித்திருக்கிறார்.

பாலிவுட் நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவான 'ஸ்டார்டஸ்ட் விருதுகள் 2015 விழா' சமீபத்தில் நடந்து முடிந்தது.இந்த விழாவில் நடிகை சன்னி லியோனையும், பிரியங்கா சோப்ராவையும் அருகருகே வைத்து படம்பிடிக்க புகைப்படக் கலைஞர்கள் விரும்பினர்.

Sunny Leone was reluctant to stand on the side Why? Priyanka Chopra Description

ஆனால் இதற்கு பிரியங்கா சோப்ரா அவ்வளவு எளிதில் சம்மதிக்கவில்லை. பின்னர் தொடர் வற்புறுத்தல்கள் காரணமாக பிரியங்கா, சன்னி லியோன் பக்கத்தில் நின்று படமெடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சி குறித்து சன்னி லியோனை பிரியங்கா நிராகரிக்க விரும்பினார் என்று வதந்திகள் வேகமாக பரவின. ஆனால் யாரும் எதிர்பாராத ஒரு பதிலைக் கூறி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

"சன்னி லியோன் பக்கத்தில் நான் அழகாகத் தெரிய மாட்டேன் என்றே முதலில் புகைப்படம் எடுக்கப் பயந்தேன்" என்று சன்னி லியோனிற்கு ட்வீட் செய்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

"நானும் அதே போலத்தான் பயந்தேன் டார்லிங். ஊடகங்கள் சில சமயங்களில் இவ்வாறு தவறாக அர்த்தபடுத்திக் கொள்கின்றனர்.ஆனால் அவர்களின் விருப்பம் நாம் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே".என்று பிரியங்காவின் ட்வீட்டிற்கு பதிலளித்து இருக்கிறார் சன்னி லியோன்.

பிரியங்கா சோப்ராவின் நடிப்பில் வெளியான பாஜிரோ மஸ்தானி திரைப்படம் 100 கோடி கிளப்பில் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sunny Leone was reluctant to stand on the side Why? Priyanka Chopra Description. She Wrote on Twitter "I love how things r sensationalised out of context! Standing and taking pics with SunnyLeone makes me look bad cause she is stunning! Lol!.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil