அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. போலீஸாக போகிறாரா சன்னி லியோன்.. ஷாக்கான காவல் அதிகாரிகள்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் போலீஸ் தேர்வுக்கு அப்ளை செய்துள்ளது பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆபாச நடிகையாக சர்வதேச அளவில் டிரெண்டான சன்னி லியோன் பல ஆண்டுகள் கூகுள் தேடலில் முதலிடத்தை பிடித்து மிரட்டி வந்தார்.
பாலிவுட் நடிகையாக மாறிய பின்னர் கோலிவுட், மலையாளம் என பான் இந்திய நடிகையாக தற்போது வலம் வருகிறார் சன்னி லியோன். பெரிய பெரிய கலை நிகழ்ச்சிக்கெல்லாம் பல கோடி கொடுத்து இவரை நடனமாட அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், திடீரென இவர் ரியல் போலீஸ் அதிகாரியாக மாறப் போகிறார் என சோஷியல் மீடியா முழுக்க பரவிய தகவல் போலீஸ் அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
போலீஸ் தேர்வில் சன்னி லியோன் போட்டோ: ஆனால், விஷயம் என்னவென்று விசாரித்தால் உத்தர பிரதேசத்தில் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்த நபர் ஒருவர் தனது போட்டோவுக்கு பதிலாக தனது கேலரி முழுக்க இருந்த சன்னி லியோன் புகைப்படத்தில் இருந்து ஒரு போட்டோவை மாற்றி வைத்து விண்ணப்பத்தை அனுப்பி இருக்கிறார். சன்னி லியோன் போட்டோவுடன் வெளியான போலீஸ் தேர்வு விண்ணப்பத்தை பார்த்த போலீஸ் தேர்வு குழு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து அந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.
காக்கி யூனிஃபார்மில் சன்னி லியோன்: பேயாக நடித்து ஓ மை கோஸ்ட் படத்தில் மிரட்டிய சன்னி லியோன் காக்கி யூனிஃபார்மில் நிஜமாகவே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தால் பலரும் வான்டட்டாக வான்டட் லிஸ்ட்டில் இணைவார்களே, சட்டையே போடாத சன்னி லியோனுக்கு காக்கிச் சட்டை போட நினைத்தவன் எவன் டா என ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் இணையத்தை சன்டே அதுவுமாக கலகலப்பாக்கி இருக்கின்றன.

உ.பி காரங்களுக்கு இதே வேலை: கல்லூரி அட்மிஷனில் சன்னி லியோன் புகைப்படம், கான்ஸ்டபிள் தேர்வுக்கு சன்னி லியோன் படம், முதல் மார்க் எடுத்தவர்கள் லிஸ்ட்டில் சன்னி லியோன் படம் என உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு இதே வேலையா போயிடுச்சு என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பித்த நபர் தான் ரெட் கலர் டிரெஸ்ஸில் கிளாமர் போஸ் கொடுத்த சன்னி லியோன் போட்டோவை அப்லோடு செய்திருக்கிறாராம்.
ஆள்மாறாட்டம் ஜாஸ்தி: உத்தர பிரதேசத்தில் தேர்வுகளுக்கு ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் 120க்கும் மேற்பட்டவர்களை சமீபத்தில் உத்தர பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சனிக்கிழமையான நேற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் நடைபெற்ற கான்ஸ்டபிள் தேர்வுக்கான அட்மிட் கார்டில் சன்னி லியோன் படம் இடம்பெற்றது சலசலைப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











