இந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் டூப்பர்

Recommended Video

INDHUJA கு GLAMOUR நல்லா வருது | SUPER DUPER MOVIE INTERVIEW | FILMIBEAT TAMIL

சென்னை: ஒரு கமர்ஷியல் படத்திற்கு உண்டான அனைத்து அம்சங்களுடன் முழு நீள ஆக்ஷன் திரில்லராக வந்திருக்கும் சூப்பர் டூப்பர் திரைப்படத்தில் கதாநாயகி இந்துஜா சாதாரண பெண்ணாகவும், அதிரடி பெண்ணாகவும் இருவேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். இது பரபரப்பான திரில்லர் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு கமர்ஷியல் படங்களுக்கு உண்டான அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த ஒரு முழு நீள பரபரப்பான திரில்லர் படம் சூப்பர் டூப்பர். இன்று வெளியான இப்படத்தை அருண் கார்த்திக் என்ற ஏ.கே இயக்கத்தில் துருவா கதாநாயகனாகவும், இந்துஜா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

Super Duper Movie Released on Today

2011ஆம் ஆண்டு குழந்தை வேலப்பன் இயக்கத்தில் வெளியான ஆண்மை தவறேல் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஹீரோ துருவா. ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர் இந்துஜா. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பில்லா பாண்டி, திரவம் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் திரைப்படத்தில் கால் பந்து வீராங்கனையாக நடித்துள்ளார். மேலும் ஆர்யா உடன் இணைந்து நடித்த மகாமுனி திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த படத்தை தொடர்ந்து இந்துஜா நடித்துள்ள படம் சூப்பர் டூப்பர்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஜில் ஜில் ராணி என்ற பாடல் யூடியூபில் கடந்த வாரம் வெளியானது. அப்பாடலில் இந்துஜா குத்தாட்டம் போட்டு இளைஞர்களை சூடேற்றியிருந்தார். அந்தப் பாடலை இதுவரையிலும் சுமார் 7 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்நிலையில் சூப்பர் டூப்பர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இந்துஜா ஒரு புறம் சாதாரண பெண்ணாகவும் மறுபுறம் அதிரடி பெண்ணாகவும் இருவேறு தோற்றத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும் ஆதித்யா, சவுந்தர்யா, சாரா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சூப்பர் டூப்பர் திரைப்படத்தில் இரண்டு வெவ்வேறு விதமான கதை, காட்சி அமைப்பு இருந்ததால் தளபதி ரத்னம் மற்றும் சுந்தர் ராம் கிருஷ்ணன் என இரண்டு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இயக்குனர் அருண் கார்த்திக் கொடுத்த வாய்ப்பினை சரியான பயன்படுத்தி சிறப்பாக காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ளனர். திவாகர தியாகராஜன் இசையமைத்துள்ளார்.

இது பரபரப்பான திரில்லர் படம் என்பதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X