ஹீரோயின் ஆகிட்டேன்.. என்னையும் வாழ்த்துங்க தலைவரே.. ரஜினிகாந்திடம் ஆசி பெற்ற அதிதி ஷங்கர்!
சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஆசி பெற்ற புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.
Recommended Video
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தில் உருவாகும் விருமன் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் அதிதி ஷங்கர்.
இந்த படத்தில் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் பட பூஜை கோலாகலமாக நடக்க திரைத்துறையினர் பலரும் அதிதி ஷங்கரை வாழ்த்தினர்.

ஷங்கர் வாரிசு
இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரு மகள்களும் அர்ஜித் ஷங்கர் எனும் ஒரு மகனும் உள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக ஐஸ்வர்யா ஷங்கருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இன்னொரு மகளான அதிதி ஷங்கர் சினிமாவில் களமிறங்கி உள்ளார்.

அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாக உள்ளார். இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகவுள்ள விருமன் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் அதிதி ஷங்கர். சமீபத்தில் விருமன் படத்தின் பூஜை கோலாகலமாக போடப்பட்டு ஏகப்பட்ட திரை பிரபலங்கள் அதிதியை வாழ்த்தினர்.

சூர்யா தயாரிப்பில்
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்து வரும் 2டி நிறுவனத்தில் தொடர்ந்து ஏகப்பட்ட படங்கள் தயாரிக்கப்பட்டு ஒடிடிகளில் வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில், அடுத்ததாக தம்பி கார்த்தி மற்றும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கும் விருமன் படத்தையும் சூர்யா தயாரிக்கிறார்.

பொன்னியின் செல்வன் ஓவரா
வரும் செப்டம்பர் 18ம் தேதி முதல் விருமன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் அவரது போர்ஷன் ஓவரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. சமீபத்தில் ஜெயம் ரவியின் போர்ஷன் முடிந்து அவர் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் புதுப்படத்தில் கமிட் ஆன நிலையில், கார்த்தியும் அவரது போர்ஷனை முடித்து விட்டதால் படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்றே அர்த்தம்.

ராஜமெளலியிடம் வாழ்த்து
ஷங்கர் அடுத்ததாக ராம்சரணின் 15வது படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற அந்த படத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்ட நடிகை அதிதி ஷங்கரை இயக்குநர் ராஜமெளலி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் வாழ்த்தினர்.

ராஜமெளலியிடம் வாழ்த்து
ஷங்கர் அடுத்ததாக ராம்சரணின் 15வது படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற அந்த படத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்ட நடிகை அதிதி ஷங்கரை இயக்குநர் ராஜமெளலி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் வாழ்த்தினர்.

ரன்வீர் சிங்குடன்
மேலும், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் அந்நியன் படம் ரீமேக்கை இயக்க உள்ள நிலையில், அவரும் ராம்சரணின் பட பூஜையில் கலந்து கொண்டார். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் அதிதி ஷங்கர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ரன்வீர் சிங்குடன்
மேலும், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் அந்நியன் படம் ரீமேக்கை இயக்க உள்ள நிலையில், அவரும் ராம்சரணின் பட பூஜையில் கலந்து கொண்டார். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் அதிதி ஷங்கர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ரஜினியிடம் ஆசி
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி தினத்தில் 'அண்ணாத்த' ரஜினிகாந்தின் ஆசியை பெற அவரது இல்லத்திற்கே சென்றிருந்தார் நடிகை அதிதி ஷங்கர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிதி ஷங்கரை வாழ்த்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஒன் அண்ட் ஒன்லி தலைவரிடம் விநாயகர் சதுர்த்தி அன்று ஆசி பெற்றேன் என நடிகை அதிதி ஷங்கரும் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அப்பா இயக்கத்தில்
அப்பா ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, எந்திரன், 2.0 என அத்தனை படங்களும் பிரம்மாண்ட வசூல் வேட்டை ஆடிய நிலையில் ரஜினிகாந்திடம் ஷங்கரின் மகள் வாழ்த்துக்களை பெற்றுள்ளது சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யத்துடன் பார்க்கப்படுகிறது. மீண்டும் ரஜினியும் ஷங்கரும் இணைவார்களா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











