அம்மாவா நடிக்கவும் அட்ஜெஸ்ட்மெண்ட்.. பிக்கப் டிராப் முதல் இத்தனை வசதிகள்.. நடிகை மாலதி பகீர்!
சென்னை: தன்னுடைய மகளுக்கு இருக்கும் டிமாண்டை விட தனக்குத்தான் சினிமா உலகில் டிமாண்ட் அதிகம் என நடிகை மாலதி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனவுத் தொழிற்சாலையான சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து ஸ்டாராக ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு நாளும் கோடம்பாக்கத்திற்கு வந்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி காஸ்டிங் கோச் எனும் படுக்கைக்கு வந்தால் பட வாய்ப்பு என்கிற கலாச்சாரம் உலகம் முழுவதும் இருக்கத்தான் செய்கிறது. அதிக பணம் கிடைப்பதால் பலர் அதற்கு சம்மதித்து அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து விடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.

பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் முன்னணி நடிகர்களும் நடிகைகளும் தனிப்பட்ட வாழ்க்கையில் என்னவெல்லாம் லீலைகள் செய்து வருகின்றனர் என்பதை அடிக்கடி பேசி வருகிறார். சமீபத்தில் சுசித்ரா தனுஷ், திரிஷா, விஜய், ஜெயம் ரவி, ஆர்த்தி என பல பிரபலங்கள் பற்றியும் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், துணை நடிகை மாலதி தனக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் அனுபவங்களை பட்டியலிட்டு கூறியுள்ளார்.
துணை நடிகை மாலதி: தமிழில் சில படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ள மாலதி கன்னட திரையுலகில் பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். அதிகமாக அம்மா வேடம் தான் தனக்கு கிடைத்து வருவதாக கூறியுள்ளார். ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கே பலர் தன்னை தவறாக அணுகினர் என்கிற குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
அம்மாவாக நடிக்கவே அட்ஜெஸ்ட்மெண்ட்: அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சென்றால் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் டார்ச்சர் செய்து வருகின்றனர். இதனால், சினிமாவில் நடிக்கவே வேண்டாம் என முடிவு செய்து விட்டேன் என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இளம் நடிகைகளுக்கு கூட இந்த பிரச்சனை அதிகம் இருப்பதில்லை. என்னை போன்று வயதான துணை நடிகைகளை டார்கெட் செய்து சினிமா பிரபலங்கள் துரத்துகின்றனர். ஈஸியாக எந்தவொரு பிரச்சனையும் பண்ணாமல் பணத்திற்காக படுக்கைக்கு வருவார்கள் என தப்புக் கணக்கு போட்டு ஆட்டம் ஆடி வருகின்றனர் என மாலதி விளாசி உள்ளார்.
ஏகப்பட்ட வசதிகள்: அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு சம்மதிக்கவில்லை என்றால் துணை நடிகை கால் மீது கால் போட்டு உட்கார்ந்தால் கூட குத்தம் என்பார்கள். செட்டில் மதிப்பது கிடையாது. ஆனால், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் துணை நடிகைகளுக்கு பிக்கப், டிராப், கேரவன் வசதி, எக்ஸ்ட்ரா மணி, மேடம் என மரியாதை என ஏகப்பட்ட சலுகைகளை கொடுக்கின்றனர் என்றும் மாலதி பகீர் கிளப்பியுள்ளார்.
தடுக்க யாருமில்லை: சினிமாவில் நடக்கும் இதுபோன்ற அசிங்கத்தை எந்தவொரு முன்னணி நடிகர்களும் தட்டிக் கேட்பதோ அல்லது தடுப்பதோ கிடையாது. சினிமாவில் இதுபோன்ற அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் அரங்கேற காரணமாகவே முன்னணி நடிகர்கள் உள்ள நிலையில், இதையெல்லாம் அவர்கள் எங்கே கண்டு கொள்ள போகிறார்கள் என போகிற போக்கில் டாப் ஹீரோக்களையும் போட்டு பொளந்து விட்டார். சினிமாவில் நடிக்க நடிகைகள் நெருக்கமாக எந்தளவுக்கு வேண்டுமானாலும் நடிக்க ரெடியாக உள்ளனர். ஆனால், அதையே அட்வான்டேஜாக எடுத்துக் கொண்டு அவர்களிடம் அத்துமீறி வருகின்றனர். இண்டஸ்ட்ரியில் இந்த பலான மேட்டர்கள் நிறையவே நடந்துக் கொண்டு தான் இருக்கிறது என மாலதி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











