நடிகைகளுக்கு விருந்து வைத்த சூர்யா - ஜோதிகா.. யார் யார் எல்லாம் வந்தாங்க தெரியுமா?

சென்னை: சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா இடையில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார். அதனைத் தொடர்ந்து இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் அவர் ஹிந்தியில் தனது முழு கவனத்தையும் செலுத்திவருகிறார். அந்தவகையில் டப்பா கார்ட்டெல் என்கிற வெப் சீரிஸில் கடைசியாக நடித்தார். அந்த வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதேபோல் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா படமும் தோல்வியை சந்தித்தது.

மும்பையை பூர்வீகமாகக் கொண்ட ஜோதிகா தமிழில் வாலி படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது திறமையை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தினார். இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே அவர் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றார். சிம்ரனின் ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அவருக்கு சரியான போட்டியாக விளங்கினார் ஜோதிகா.

பூவெல்லாம் கேட்டுப்பார்: இதற்கிடையே பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுடன் நடித்தபோது அவருக்கு காதல் ஏற்பட்டது. இரண்டு பேரின் காதலுக்கும் சூர்யாவின் வீட்டில் முதலில் பெர்மிஷன் கிடைக்கவில்லை. ஆனால் வீட்டு சம்மதத்துக்காக பல வருடங்கள் இரண்டு பேரும் காத்திருந்தார்கள். ஒருவழியாக சம்மதம் கிடைத்ததால் இரண்டு பேரின் திருமணமும் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya and Jyothika hosted a party for actresses Here are Details

நடிப்புக்கு ஓய்வு: திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்ட ஜோதிகா முழு ஹவுஸ் ஒய்ஃபாக மாறியதால் சினிமாவிலிருந்து விலகியிருக்க ஆரம்பித்தார். முழுக்க முழுக்க குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய அவர் சில வருடங்கள் கழித்து 36 வயதினிலே படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட்டாக தேர்ந்தெடுத்து நடித்தார். அப்படி அவர் நடித்த ராட்சசி, உடன் பிறப்பே என ஏராளமான படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன.

ஹிந்தியில் கவனம் செலுத்தும் ஜோ: தமிழில் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ட்விஸ்ட்டாக ஹிந்தியில் அவரது முழு கவனமும் இருக்கிறது. ஸ்ரீகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; சூர்யாவையும் ஹிந்தியில் கவனம் செலுத்த வைத்திருக்கிறார். அதற்காக இரண்டு பேரும் தங்களது குழந்தைகளோடு மும்பையில் இப்போது செட்டில் ஆகியிருக்கிறார்கள். இதற்கிடையே ஜோதிகா டப்பா கார்ட்டெல் என்கிற வெப் சீரிஸில் கடைசியாக நடித்தார். அந்த வெப் சீரிஸ் சுமாரான வரவேற்பைத்தான் பெற்றது.

Suriya and Jyothika hosted a party for actresses Here are Details

சூர்யாவின் அடுத்த படங்கள்: அதேபோல் சூர்யா கடைசியாக கங்குவா படத்தில் நடித்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படமானது மே மாதம் ரிலீஸாகவிருக்கிறது. அதிலிருந்து வெளியான இரண்டு சிங்கிள்களும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துவரும் சூர்யா; அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

விருந்து வைத்த ஜோடி: இந்நிலையில் சூர்யாவும், ஜோதிகாவும் திரை நட்சத்திரங்களுக்கு மதிய விருந்து வைத்திருக்கிறார்கள். அந்த விருந்தில் திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா, பிருந்தா மாஸ்டர், டிடி, ரம்யா என ஏகப்பட்ட பேர் கலந்துகொண்டார்கள். அதுதொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன. அதேசமயம் எதற்காக இந்த விருந்தை அவர்கள் வைத்தார்கள் என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X