ஹே சூர்யா போ போ.. கணவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் ஜோதிகா.. க்யூட் வீடியோ
சென்னை: சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்கள். சூர்யா விரைவில் பாலிவுட்டில் அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்கள். இந்நிலையில் சூர்யா - ஜோதிகா தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில்தான் சூர்யாவும், ஜோதிகாவும் முதன்முறையாக சேர்ந்து நடித்தார்கள். அப்போதிருந்தே காதலிக்கவும் தொடங்கிவிட்டார்கள். அதனையடுத்து பல வருடங்கள் தீவிரமாக காதலித்துவவந்த அவர்கள், கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். ஒரு மகளும், ஒரு மகனும் பிறந்தார்கள். குழந்தைகள் நன்றாக வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார் ஜோ. தமிழில் அவர் 36 வயதினிலே, உடன்பிறப்பே, பொன்மகள் வந்தாள், ராட்சசி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஹிந்தியில் கவனம்: தமிழில் மட்டும் இருந்த அவரது கவனம்; இரண்டாவது இன்னிங்ஸில் ஹிந்தி பக்கமும் சென்றது. தனது கவனத்தை அங்கே செலுத்துவது மட்டுமின்றி சூர்யாவின் கவனத்தையும் அதில் திசை திருப்பிவிட்டார். அதன் காரணமாக சென்னையிலிருந்து குடிபெயர்ந்து மும்பைக்கு சென்று குழந்தைகளுடன் செட்டில் ஆகிவிட்டார்கள். ஆனால் சிவகுமாருடன் ஏற்பட்ட பிரச்னையால்தான் அவர்கள் மும்பைக்கு தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்கள் என்றும் கிளப்பிவிட்டார்கள் சிலர்.
மறுத்த ஜோடி: ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்தார்கள் சூர்யாவும், ஜோதிகாவும். மேலும் ஜோதிகா மீண்டும் நடிப்பதற்கு சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்தார் என்று வந்த தகவலையும் முழுவதுமாக மறுத்தார் ஜோ. சொல்லப்போனால் நான் மீண்டும் நடிக்க வந்ததற்கு சிவகுமார்தான் முழு ஆதரவையும் கொடுத்தார் என்றும் ஒரு பேட்டியில் ஜோதிகா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் எப்படி சூர்யா சக்சஸ்ஃபுல் ஹீரோவாக வலம் வருகிறாரோ அதே போல் ஹிந்தியிலும் ஒரு ரவுண்டு வர வைத்துவிட வேண்டும் என்ற பிளானில் ஜோதிகா இருக்கிறார்.
அவரது லைன் அப்: ஜோவின் லைன் அப்பை பொறுத்தவரை கடைசியாக ஹிந்தியில் டப்பா கார்ட்டெல் உள்ளிட்ட வெப் சீரிஸில் நடித்தார். அடுத்ததாக அமேசான் ப்ரைம் தயாரிப்பாக வரும் வெப் சீரிஸிலும் கமிட்டாகியிருக்கிறார். இவை தவிர்த்து தமிழிலும் சிலரிடம் கதை கேட்டு ஓகே சொல்லி வைத்திருக்கிறார் என்றும்; விரைவில் அதுகுறித்த அறிவிப்புகள் எல்லாம் அடுத்தடுத்து அதிகாரப்பூர்வமாக வரும் எனவும் விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். இந்நிலையில் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
என்ன வீடியோ?: அதாவது மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்கள் சூர்யாவும், ஜோதிகாவும். அப்போது சூர்யாவை சோலோவாக நிற்க வைத்து ஃபோட்டோ எடுப்பதற்கான வேலைகள் தொடங்கின. அதனை சூர்யா கவனிக்காமல் அங்கிருந்து கிளம்ப பார்த்தார். உடனே அவரை தடுத்து நிறுத்திய ஜோதிகாவோ, 'சூர்யா போ போ.. சோலோவாக ஃபோட்டோ எடுக்க வேண்டும்' என சொல்ல; சிரித்துக்கொண்டே அங்கே சென்று போஸ் கொடுத்தார் சூர்யா.


Click it and Unblock the Notifications
