»   »  சமந்தாவின் நிறைவேறாத ஆசை என்ன?

சமந்தாவின் நிறைவேறாத ஆசை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை சமந்தாவுக்கு நிறைவேறாத ஆசை என்று எதுவும் இல்லையாம். சூர்யா ஹீரோயின்களுடன் பேச வெட்கப்படுவார் என சமந்தா தெரிவித்துள்ளார்.

சமந்தா, ஜூனியர் என்டிஆர், மோகன்லால் நடித்த ஜனதா கராஜ் தெலுங்கு படம் ஹிட்டாகியுள்ளது. ஜனதா கராஜ் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் சமந்தா மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்நிலையில் அவர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

திருமணம்

திருமணம்

நான் ஒருவரை காதலித்து வருகின்றேன். அவர் யார், எங்கள் திருமணம் எப்பொழுது என்று கேட்க வேண்டாம். எங்கள் திருமண தேதியை நானே உங்களிடம் தெரிவிப்பேன்.

சினிமா

சினிமா

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமா படங்களில் நடிப்பேன். நான் வாழப் போகும் குடும்பத்தின் கவுரவம் பாதிக்காதபடி உள்ள கதாபாத்திரங்களில் நடிப்பேன்.

நிலை இல்லை

நிலை இல்லை

சினிமாவில் எதுவும் நிலை இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒருவரின் தலையெழுத்து மாறுகிறது. இங்கு பணம், புகழ் என எதுவும் நிலை இல்லை என்பதால் எனக்கு எதிர்கால திட்டம் எதுவும் இல்லை. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும், அவ்வளவு தான்.

சமூக சேவை

சமூக சேவை

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது தான் வாழ்க்கையை பற்றி யோசித்தேன். அதன் பிறகு குழந்தைகளுக்கு உதவி செய்ய பிரதியூஷா என்ற தொண்டு நிறுவனத்தை துவங்கினேன்.

சூர்யா

சூர்யா

சூர்யா ஹீரோயின்களுடன் பேச வெட்கப்படுவார். மகேஷ்பாபு மனதில் பட்டத்தை பேசிவிடுவார். மகேஷ்பாபு வேலையில் அர்ப்பணிப்போடு இருப்பார்.

நிறைவேறாத ஆசை

நிறைவேறாத ஆசை

முன்னணி ஹீரோக்கள், பெரிய இயக்குனர்களுடன் பணியாற்ற வேண்டும் என அனைத்து ஹீரோயின்களுமே ஆசைப்படுவார்கள். நான் முன்னணி ஹீரோக்களுடனும், இயக்குனர்களுடனும் பணியாற்றிவிட்டேன். அதனால் நிறைவேறாத ஆசை இல்லை.

English summary
Samantha said that actor Suriya is too shy to talk to heroines in the shootingspot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil