ஜோதிகாவுடன் பிரச்னையா?.. யாரு சொன்னது?.. சூர்யா மும்பை போக காரணமே இதுதானாம்
சென்னை: சூர்யாவும் ஜோதிகாவும் தாங்கள் இணைந்து நடித்த முதல் படமான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்தே காதலித்தனர். முதலில் சூர்யாவின் வீட்டில் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது. காலம் செல்ல செல்ல மனம் மாறிய சிவக்குமார் இருவரின் திருமணத்துக்கும் பச்சை கொடி காண்பித்தார். அதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு சிறந்த ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. அதேபோல் ஜோதிகாவும் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர். இரண்டு பேரும் சேர்ந்து முதலில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போதிருந்தே இரண்டு பேரும் காதலிக்க தொடங்கிவிட்டார்கள். பிறகு வீட்டு சம்மதம் கிடைக்காததால் தங்களது திருமணத்துக்காக பல வருடங்கள் காத்திருந்தார்கள்.

தியா, தேவ்: ஒருவழியாக சூர்யா தனது வீட்டு சம்மதத்தை பெற்றதையடுத்து அவர்களது திருமணம் கடந்த 2006ஆம் ஆண்டு நடந்தது. அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். தங்களது குழந்தைகளின் பெயரில்தான் 2D நிறுவனத்தையும் அவர்கள் நடத்தி வருகிறார்கள். கோலிவுட்டின் மிகச்சிறந்த ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருக்கும் சூர்யாவும், ஜோதிகாவும் இப்போது மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறார்கள்.
பிரச்னையா?: ஜோதிகாவும் திருமணத்துக்கு பிறகு இப்போது பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். முக்கியமாக பாலிவுட்டில் அவரது கவனம் முழுவதுமாக திரும்பியிருக்கிறது. அதன் காரணமாகத்தான் சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக தெரிகிறது. ஆனால் சிவக்குமார் வீட்டுடன் ஜோதிகாவுக்கு பிரச்னை ஏற்பட்டதுதான் மும்பையில் செட்டில் ஆக காரணம் என்றும் ஒரு வதந்தி கடந்த சில காலமாக பரவியது.
மறுத்த ஜோதிகா: ஆனால் இதனை ஜோதிகா திட்டவட்டமாக மறுத்தார். தான் மீண்டும் நடிக்க வந்ததில் சூர்யாவின் தந்தை சிவக்குமாருக்கு மகிழ்ச்சிதான். எங்களுக்குள் எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்று ஆணித்தரமாக கூறினார். இருந்தாலும் இந்த வதந்தி ஓய்ந்தபாடில்லை. சூழல் இப்படி இருக்க ஜோதிகா நேற்று முன் தினம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த நாளில் சூர்யா மும்பை ஏர்போர்ட்டில் காஜல் அகர்வால் குடும்பத்தினரை சந்தித்த வீடியோ ட்ரெண்டானது.
ஜோதான் காரணம்: அப்போது ஜோதிகா சூர்யாவுடன் இல்லை. அதனையடுத்து சூர்யாவுடன் எப்போதும் ஜோடியாக இருக்கும் ஜோதிகா ஏன் அன்றைய தினம் இல்லை; எனவே இரண்டு பேருக்கும் பிரச்னை என்பது உறுதியாகிவிட்டதாக சிலர் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று இப்போது தெரியவந்திருக்கிறது. அதாவது ஜோதிகாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காகத்தான் சூர்யா மும்பைக்கே அன்றைய தினம் சென்றாராம்.
முக்கியமாக கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கும் வேளையிலும் ஜோதிகாவின் பிறந்தநாள் அன்று அவருடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கங்குவா படத்தின் ப்ரோமோஷனைகூட ஓரம்கட்டிவிட்டு மும்பைக்கு பறந்திருக்கிறார் அவர் என்கின்றனர் திரைத்துறையினர். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், அவர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். பிறகு ஏன் இப்படி வதந்தியை பரப்புகிறார்கள் என்று கேள்வி எழுப்பிவருகின்றனர். முன்னதாக சூர்யா நடித்த கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











