கல்யாண வாழ்க்கை எப்படி இருக்குன்னு கேட்டுட்டே அத்துமீறிட்டான்.. இயக்குநரை விளாசிய பிரபல நடிகை!
மும்பை: தமிழில் மூன்று பேர் மூன்று காதல், புதிய திருப்பங்கள், ஜெய்ஹிந்த் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுர்வீன் சாவ்லா தனக்கு நடந்த காஸ்டிங் கோச் சம்பவங்கள் குறித்து மனம் திறந்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. மும்பையில் பாலிவுட் இயக்குநர் ஒருவர் திருமணம் ஆன புதிதில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றும் தென்னிந்திய இயக்குநர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என்றும் அவர் ஓபனாக கூறியுள்ளார்.
நாட்டில் நடக்கும் பாலியல் தொல்லை பிரச்னைகள் உள்பட பல அக்கிரமங்கள் குறித்து தட்டிக் கேட்கும் படியான திரைப்படங்கள் சினிமாவில் வருகின்றன. ஆனால், அந்த படங்களை எடுக்கும் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களே சினிமாவில் காஸ்டிங் கோச் நடத்திக் கொண்டிருப்பது தான் வேடிக்கையின் உச்சம் எனக் கூறியுள்ளார் சுர்வின் சாவ்லா.

பெரிய நடிகைகள் பலரும் தங்களுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லை நடந்துள்ளது என்று அவ்வப்போது மீடியாக்களிடம் பேட்டிக் கொடுக்கும் போது மனம் திறந்து பேசி விடுவார்கள். அப்படியொரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது.
யாரு இந்த சுர்வீன் சாவ்லா?: 40 வயதை கடந்துவிட்ட சுர்வீன் சாவ்லா இந்தி படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மாதவன் உடன் இவர் இணைந்து நடித்த Decoupled வெப்சீரிஸ் எல்லாம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்றுத் தந்தது. 2008ம் ஆண்டு சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான பரமேஷா பன்வாலா படத்தின் மூலம் ஹீரோயினாக கன்னட திரையுலகில் அறிமுகமானவர் தான் சுர்வின் சாவ்லா. தமிழில் மூன்று பேர் மூன்று காதல், புதிய திருப்பங்கள், ஜெய்ஹிந்த் 2 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். கடைசியாக ராணா நாயுடு வெப்சீரிஸிலும் இவர் ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்தார்.
2015ல் திருமணம்: கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வந்த சுர்வீன் சாவ்லா கடந்த 2015ம் ஆண்டு அக்ஷய் தாக்கர் என்பவரை இத்தாலியில் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார். திருமணமாகி 2 ஆண்டுகள் கழித்து ட்விட்டரில் தான் தனக்குத் திருமணம் ஆன விஷயத்தை 2017ம் ஆண்டு தான் வெளிப்படுத்தினார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து வரும் சுர்வீன் சாவ்லா தொலைக்காட்சி மற்றும் ஓடிடி வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

கல்யாணம், கணவர் பற்றி கேட்டுக்கொண்டே: திருமணம் ஆன புதிதில், பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க ஆடிஷனுக்குச் சென்றேன். அப்போது, அந்த படத்தின் இயக்குநர் திருமண வாழ்க்கை எப்படி போகிறது, உங்கள் கணவர் என்ன செய்கிறார் என திருமணம் பற்றி நன்றாக பேசிக் கொண்டிருந்தார். நானும் அவரது கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப பார்த்தேன். அப்போது, திடீரென கதவருகே என்னை வழிமறித்து முத்தம் கொடுக்க பாய்ந்துவிட்டார். நான், உடனடியாக அதை தடுத்துவிட்டு அந்த படமே வேண்டாம் என அங்கிருந்து சென்றுவிட்டேன் எனக் கூறியுள்ளார்.
படுக்கைக்கு அழைத்த தென்னிந்திய இயக்குநர்: தென்னிந்திய சினிமாவில் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் சுர்வீன் சாவ்லா. தென்னிந்திய இயக்குநர் ஒருவருக்கு ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது. அவருடைய நண்பர் ஒருவர் தான் அவருக்கு டிரான்ஸ்லேட்டர். படத்தில் நடிக்க வேண்டுமென்றால் தன்னுடன் படுக்க வேண்டும் என அவர் சொல்ல, அந்த நபர் தயங்கியபடியே டிரான்ஸ்லேட் செய்ததும் ஷாக் ஆகிவிட்டேன். அதற்கும் நோ சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன். இப்படித்தான் பல பட வாய்ப்புகளை இழந்தேன். சினிமாவில் நடிகைகளுக்கு சாதகமான சூழல் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை என வெளிப்படையாக Hauterfly யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











