சூர்யாவின் அடுத்தபட ஜோடியாகியார் அழகு மஞ்சு வாரியர்

By Mayura Akilan

சூர்யாவின் பெயரிடப்படாத தமிழ், தெலுங்கு படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியார் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஞ்சான் படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாஸ் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. மாஸ் படம் முடிந்ததும், விக்ரம் குமார் இயக்கும் படத்தில்தான் நடிக்க இருக்கிறார் சூர்யா.

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தை சூர்யாவின் சொந்தப்பட நிறுவனமான 2டி தயாரிக்கிறது. இது ஹேஸ்ம் அல்ல, அதிகாரபூர்வமான தகவல். இந்தத் தகவலை சூர்யாவின் 2டி நிறுவனம் தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

2டி நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக பாண்டிராஜ் இயக்கத்தில் இப்போது ஒரு படம் உருவாகி வருகிறது. குழந்தைகளை மையப்படுத்திய இந்தப் படத்தில் கார்த்திக் குமார், பிந்து மாதவி ஜோடியாக நடித்து வருகின்றனர்.

சூர்யாவின் சொந்த தயாரிப்பு

சூர்யாவின் சொந்த தயாரிப்பு

இப்படத்தை அடுத்து 2டி நிறுவனத்தின் இரண்டாவது படமாக உருவாகும் படத்தையே விக்ரம் குமார் இயக்குகிறார். தன்னுடைய புதிய பேனரில் சூர்யா தயாரித்து நடிக்கும் முதல் படம் என்ற பெருமையும் இப்படத்துக்கு கிடைத்திருக்கிறது. விக்ரம்குமார் தெலுங்கிலும் வெற்றிப்பட இயக்குநராக இருப்பதால், சூர்யா நடிக்கும் படத்தை தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரிக்க உள்ளனர்.

மஞ்சு வாரியார்

மஞ்சு வாரியார்

இப்படத்தில் 14 வருடங்கள் கழித்து மீண்டும் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியிருக்கும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் சூர்யாவின் ஜோடியாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

திலீப் உடன் திருமணம்

திலீப் உடன் திருமணம்

1995ல் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் எல்லாருடனும் நடித்தார். திலீப்புடன் நடிக்கும் போது மஞ்சுவிற்கு, காதல் மலர்ந்தது. 1999ல் சினிமாவை துறந்து திருமண வாழ்க்கையில் இணைந்தார்.

முறிந்த திருமணம்

முறிந்த திருமணம்

ஒரு பெண் குழந்தைக்கு தாயும் ஆனார். ஆனால் இவர்களது 15 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிந்து போனது.

விளம்பரப்படத்தில் வரவேற்பு

விளம்பரப்படத்தில் வரவேற்பு

சினிமாவை விட்டு விலகி இருந்த இவரை கல்யாண் ஜுவல்லர் விளம்பரத்தின் மூலம் மீண்டும் நடிக்க வைத்தனர். அந்த விளம்பரம் நல்ல வரவேற்ப்பை பெற்றதை அடுத்து இனி சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்தார்.

இரண்டாம் பயணம்

இரண்டாம் பயணம்

இதன் மூலம் தனது இரண்டாம் சினிமா பயணத்தை மலையாளத்தில் தொடங்கிய இவர் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ' என்ற படத்தில் நடித்தார் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியதால் இவருக்கு வாய்ப்புகள் வந்து குவியத்துவங்கியுள்ளது.

கிலி பிடித்த சேச்சிகள்

கிலி பிடித்த சேச்சிகள்

கேரள சினிமாவின் முன்னணி ஹீரோயின்களே இந்த ஹிட்டினால் கிலி பிடித்திருக்கிறார்கள். இந்த அச்சத்தை மேலும் அதிகப்படுத்துவதை போல கதைகள் கேட்டுக் கொண்டிருக்கிறார் மஞ்சு. அதில் தமிழ் படங்களும் அடக்கம் என்கின்றனர்.

கைவசம் 10 படங்கள்

கைவசம் 10 படங்கள்

ஆனால் படத்தின் கதை, கதாபாத்திரம் அறிந்து அதன் பிறகுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறாராம். தற்போதுவரை இவர் கையில் 10 படங்களுக்குமேல் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்துமே அடங்கும்.

நாகர்ஜூனா ஜோடி

நாகர்ஜூனா ஜோடி

தெலுங்கில் நானி, நாகார்ஜுனா இவர்களுடனும் தமிழில் சூர்யாவுடனும் சேர்ந்து நடிக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சூர்யா ஜோடியாக

சூர்யா ஜோடியாக

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தமிழ், தெலுங்கு படத்தில் தான் மஞ்சுவாரியார் நடிக்கப்போகிறாராம். ஆனால் இதை மஞ்சு வாரியர் இன்னும் உறுதி செய்யவில்லை என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X