அடடா... அந்த படத்தை மிஸ் பண்ணிட்டேனே...புலம்பும் நடிகை !

சென்னை : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகைகள் தானாம்.

கால்ஷூட் பிரச்சினையால் இந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டதை எண்ணி இந்த நடிகைகள் புலம்புகிறார்களாம்.

படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு புலம்பி என்ன பயன் என்று, ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம்

கௌதம் மேனன் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம். இத்திரைப்படத்தில் சூர்யா, சிம்ரன்,சமீரா ,ரம்யா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வெற்றி பெற்று திரையரங்கில் பல நாட்கள் ஓடின.

இரண்டு வேடத்தில்

இரண்டு வேடத்தில்

இத்திரைப்படத்தில் சூர்யா அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், காலேஜ், அமெரிக்கன் இங்கிலீஷ், ஆர்மி புல்லட், சிக்ஸ்-பேக் எனஅசத்தல் வித்தியாசம் தந்து படத்துக்குத் தனி கலர் சேர்ந்திருந்தார்.

அழகு சூர்யா

அழகு சூர்யா

வாரணம் ஆயிரம் திரைப்படம், சூர்யாவின் கேரியரில் ஒரு மைல்கல் திரைப்படமாக அமைந்தது. அரும்பு மீசை, குறும்புப் பார்வை 16 வயதுப் பையனாக வரும் சூர்யா நடிப்பில் ஆறு அல்ல... நூறு வித்தியாசம். மைனர் மாணவனாக விடலை வித்தை புரிவது, ராணுவ அதிகாரியாக அதிரடி சாகசம் செய்வது, சமீராவைப் பார்க்கும்போதெல்லாம் தன் இதயம் குத்தி காதல் பாஷை பேசுவது பியூட்டிஃபுல் சூர்யா என்று சொல்லவைத்தார்.

ஹிட் பாடல்கள்

ஹிட் பாடல்கள்

இப்படத்தைத் தாங்கிப் பிடிக்கத் தோள் கொடுத்தது பாடல்களும் ஒளிப்பதிவும் தான், ஹாரிஸ் ஜெயராஜின் ஈர்க்கும் இசையும் கவிஞர் தாமரையின் வருடும் வரிகளுமாக ஒவ்வொரு பாடலும் இனிப்பு இன்னிங்ஸ்.

தீபிகாபடுகோனையிடம் பேச்சு

தீபிகாபடுகோனையிடம் பேச்சு

வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இன்னும் இத்திரைப்படத்தின் மீது ஒருவித ஈர்ப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் ஒருவர் சமீரா ரெட்டி மற்றொருவர் ரம்யா நடித்திருப்பார்கள்.இதில்,சமீரா ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகாபடுகோனையிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு கால்ஷூட் பிரச்சினை இருந்ததால் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஜெனிலியாவிடம்

ஜெனிலியாவிடம்

அதே போல் ரம்யா கதாபாத்திரத்திற்கு முதலில் ஜெனிலியாவை தான் கமிட் செய்ய பேச்சு வார்த்தை நடைபெற்றதால், அவரும் அப்போது பிஸியாக இருந்ததால் அந்த வாய்ப்பு தவறவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் அடாடா ஒரு நல்ல வாய்பை இப்படி தவறவிட்டுவிட்மே என்று வருத்தப்படுகிறார்களாம். இப்போ வருத்தப்பட்டு என்ன பயன் என்று ரசிகர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X