ஹீரோயின்
ஜோதிகாவுக்கும், சூரியாவுக்கும் காதல் என்று கிசு கிசு பலமாக வெளிவந்த வண்ணம்உள்ளது. சிவகுமாரின் மகன் சூரியாவின் முதல் படமான பூவெல்லாம் கேட்டுப்பார்படத்தில் இருவருமே, அறிமுகமாயினார்கள்.
அதைத் தொடர்ந்து இப்போது உயிரிலே கலந்து படத்திலும் நடித்து வருகிறார்கள்.சூரியாவைப் பற்றி ஜோதிகாவிடம் கேட்டால், தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்ரொம்ப ரிசர்வ் டைப் என்று பெரிய சர்டிபிகேட் கொடுத்து விடுவார்.
இது ஒரு புறமிருக்க, ஜோதிகா அறிமுகமாகி நடித்தது பூவெல்லாம் கேட்டுப்பார்என்றாலும், அவர் நடித்து வெளிவந்த முதல் படம் வாலி என்பதைமறந்துவிடக்கூடாது.
இந்தப் படத்தின் டைரக்டர் சூரியா. இந்த சூரியாவின் இரண்டாவது படமான குஷிபடத்திலும் ஜோதிகாதான் கதாநாயகி. இவருக்கும் ஜோதிகாவுக்கும் இடையே ஒருநல்ல உறவு மலர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நல்ல உறவுன்னா என்ன? காதல்தான். இதைப்பற்றி கேட்டால், ஒரு பலத்த சிரிப்புடன்அப்படி எல்லாம் எதுவும் கிடையாது என்கிறார். சரி. ஜோதிகா ஏதோ ஒரு சூரியாவைக்காதலிக்கிறார். ஆனால் டைரக்டர் சூரியாவைவிட, நடிகர் சூரியாவுக்குத்தான் அதிகமார்க் கொடுக்கிறார். அப்போ டைரக்டர் சூரியா ஒரு தலைக் காதலா?.


Click it and Unblock the Notifications











