»   »  சத்யராஜுடன் ஜோடி சேரும் சூசன்

சத்யராஜுடன் ஜோடி சேரும் சூசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

"நெறஞ்ச மனசு" சூசனுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு படம் கிடைத்துள்ளது. விஜயகாந்துடன் ஜோடி சேர்ந்தஅவர், அடுத்து சத்யராஜுடன் ஜோடி கட்டுகிறார்.

மும்பை குட்டியான சூசனின் முத்தல் தோற்றத்தால், விஜயகாந்துடன் நெறஞ்ச மனசில் ஜோடி சேர்ந்தார். கிராமத்து வேடம்என்பதாலும், விஜயகாந்த் படம் என்பதாலும் நடிப்புக்கு ரொம்ப வாய்ப்பில்லாமல் போனது. என்றாலும் மனம் சோர்ந்து விடாமல்அடுத்தடுத்து வாய்ப்புகளைத் தேடி தனது ஆல்பத்தை கோலிவுட்டில் புழக்கத்தில் விட்டிருந்தார் சூசன்.

அவரது ஆல்பத்தைப் பார்த்த இயக்குநர் அரிராஜன், தனது "கூட்டணி ஆட்சி படத்திற்கு சூசனைப் புக் செய்து விட்டார்.அரிராஜன் தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். சத்யராஜ் தான் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.

முதல் படத்தில் கண்டாங்கி சேலையுடன் கலாய்த்த சூசன், இதில் மாடர்ன் பொண்ணாக வருகிறாராம். சத்யராஜ் படம் என்பதால்கவர்ச்சிக்கும் நல்ல வேலை இருக்கும் என்பதால் அதற்கும் சூசன் தயார் தானாம்.

இந்தப் படத்தில் கவுண்டமணியும், மணிவண்ணனும், சத்யராஜுடன் கூட்டணி அமைத்து படம் முழுக்கக் கலாய்க்கப்போகிறார்களாம். சிறிது இடைவேளைக்குப் பிறகு கவுண்டமணி முற்றிலும் புதிய தோற்றத்துடன் வருகிறார் என்கிறார்கள்.

இந்தப் படத்தின் மூலம் கவுண்டமணி, காமடியில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று அரிராஜன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.கூடுதல் கவர்ச்சிக்கு அபிநயஸ்ரீயும் படத்தில் இருக்கிறார். குத்துப் பாட்டு ஒன்றும் அவருக்கு உண்டாம். இவர்கள் தவிர மும்பைகட்டழகி ஒருவரின் குத்துப்பாட்டுக்கும் ஏற்பாடு நடக்கிறதாம்.

சுந்தர்.சி.யிடம் உதவி இயக்குநராக இருந்த லட்சுமணன் என்பவர் தான் படத்தை இயக்கப் போகிறார். ஜூன் 1ம் தேதிஷூட்டிங்கை ஆரம்பித்து ஜூலையில் படத்தை வெளியிடப் போகிறார்களாம்.

சூசனுக்கு, கூட்டணி ஆட்சியாவது கை கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Read more about: susan to pair with sathyaraj

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil