»   »  சூஸனின் செகண்ட் இன்னிங்ஸ்! சூஸனைத் தெரியுமோ சூஸன்? மறந்திருந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பில்லை!நெறஞ்ச மனசு படத்தில் தழையத் தழைய, கொசுவம் வைத்த புடவை கட்டி, முந்தானையால் விஜயகாந்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும்இழுத்தாரே அந்த சூஸனைப் பத்தித்தான் அடுத்து வரும் பத்திகள்.நெறஞ்ச மனசோட படத்தோடு சூஸனை அப்புறம் காணவில்லை. முதல் படம் சரியாகப் போணியாத காரணத்தாலும், தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடும்டெக்னிக்கு தெரியாததாலும், அம்மணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அத்தோடு முத்திப் போன முகமாக இருப்பதால் இளசுகளுக்கு இவரை எப்படி "சோடி போடுவது சோடி! என்று தயாரிப்பாளர்களும் குழம்பிப் போய்சூஸனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இத்தனை மைனஸ்கள் இருந்தும் சூஸன் ஒரு படத்தில் புக் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் இளைஞரான சத்யராஜ்ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் கூட்டணி ஆட்சி. சத்யராஜுடன் இதில் கவுண்டமணியும் சேர்ந்து லூட்டியடித்திருக்கிறார்.இப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார் சூஸன். முதல் படத்திலேயே துடுக்குத்தனமாக நடித்திருந்த சூஸன், இந்தப் படத்தில் காமடியில்கலக்கியிருக்கிறாராம். அதுவும் எப்படி தெரியுமா? பிக்பாக்கெட் அடிக்கும் பலே பேர்வழியாக வருகிறாராம்.சமீபத்தில் பொள்ளாச்சியில் ஷூட்டிங் முடித்து விட்டு வந்த சூஸனை நிறுத்தி வைத்துக் காதைக் கடித்தோம். இந்தப் படத்தில் வித்தியாசமான சூஸனைப்பார்க்கப் போகிறார்கள் ரசிகர்கள். காமடியில் கலக்கியுள்ளேன். என்னோடு சத்யராஜ் சாரும், கவுண்டமணி சாரும் பின்னி எடுத்திருக்கிறார்கள்.காமடி மட்டுமல்ல, கலக்கல் டான்ஸும் போட்டுள்ளேன். எனது முழுப் பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் வகையில், அட்டகாசமான கேரக்டர்இது. படம் வந்ததும் ரசித்துப் பாருங்கள் என்று கூறினார் சூஸன்.கூட்டணி ஆட்சியாவது சூஸனைக் கரையேத்துமா, பாப்போம்!

சூஸனின் செகண்ட் இன்னிங்ஸ்! சூஸனைத் தெரியுமோ சூஸன்? மறந்திருந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பில்லை!நெறஞ்ச மனசு படத்தில் தழையத் தழைய, கொசுவம் வைத்த புடவை கட்டி, முந்தானையால் விஜயகாந்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும்இழுத்தாரே அந்த சூஸனைப் பத்தித்தான் அடுத்து வரும் பத்திகள்.நெறஞ்ச மனசோட படத்தோடு சூஸனை அப்புறம் காணவில்லை. முதல் படம் சரியாகப் போணியாத காரணத்தாலும், தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடும்டெக்னிக்கு தெரியாததாலும், அம்மணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அத்தோடு முத்திப் போன முகமாக இருப்பதால் இளசுகளுக்கு இவரை எப்படி "சோடி போடுவது சோடி! என்று தயாரிப்பாளர்களும் குழம்பிப் போய்சூஸனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இத்தனை மைனஸ்கள் இருந்தும் சூஸன் ஒரு படத்தில் புக் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் இளைஞரான சத்யராஜ்ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் கூட்டணி ஆட்சி. சத்யராஜுடன் இதில் கவுண்டமணியும் சேர்ந்து லூட்டியடித்திருக்கிறார்.இப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார் சூஸன். முதல் படத்திலேயே துடுக்குத்தனமாக நடித்திருந்த சூஸன், இந்தப் படத்தில் காமடியில்கலக்கியிருக்கிறாராம். அதுவும் எப்படி தெரியுமா? பிக்பாக்கெட் அடிக்கும் பலே பேர்வழியாக வருகிறாராம்.சமீபத்தில் பொள்ளாச்சியில் ஷூட்டிங் முடித்து விட்டு வந்த சூஸனை நிறுத்தி வைத்துக் காதைக் கடித்தோம். இந்தப் படத்தில் வித்தியாசமான சூஸனைப்பார்க்கப் போகிறார்கள் ரசிகர்கள். காமடியில் கலக்கியுள்ளேன். என்னோடு சத்யராஜ் சாரும், கவுண்டமணி சாரும் பின்னி எடுத்திருக்கிறார்கள்.காமடி மட்டுமல்ல, கலக்கல் டான்ஸும் போட்டுள்ளேன். எனது முழுப் பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் வகையில், அட்டகாசமான கேரக்டர்இது. படம் வந்ததும் ரசித்துப் பாருங்கள் என்று கூறினார் சூஸன்.கூட்டணி ஆட்சியாவது சூஸனைக் கரையேத்துமா, பாப்போம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூஸனைத் தெரியுமோ சூஸன்? மறந்திருந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பில்லை!

நெறஞ்ச மனசு படத்தில் தழையத் தழைய, கொசுவம் வைத்த புடவை கட்டி, முந்தானையால் விஜயகாந்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும்இழுத்தாரே அந்த சூஸனைப் பத்தித்தான் அடுத்து வரும் பத்திகள்.

நெறஞ்ச மனசோட படத்தோடு சூஸனை அப்புறம் காணவில்லை. முதல் படம் சரியாகப் போணியாத காரணத்தாலும், தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடும்டெக்னிக்கு தெரியாததாலும், அம்மணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அத்தோடு முத்திப் போன முகமாக இருப்பதால் இளசுகளுக்கு இவரை எப்படி "சோடி போடுவது சோடி! என்று தயாரிப்பாளர்களும் குழம்பிப் போய்சூஸனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.

இத்தனை மைனஸ்கள் இருந்தும் சூஸன் ஒரு படத்தில் புக் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் இளைஞரான சத்யராஜ்ஹீரோவாக நடிக்கிறார்.


படத்தின் பெயர் கூட்டணி ஆட்சி. சத்யராஜுடன் இதில் கவுண்டமணியும் சேர்ந்து லூட்டியடித்திருக்கிறார்.

இப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கிறார் சூஸன். முதல் படத்திலேயே துடுக்குத்தனமாக நடித்திருந்த சூஸன், இந்தப் படத்தில் காமடியில்கலக்கியிருக்கிறாராம். அதுவும் எப்படி தெரியுமா? பிக்பாக்கெட் அடிக்கும் பலே பேர்வழியாக வருகிறாராம்.

சமீபத்தில் பொள்ளாச்சியில் ஷூட்டிங் முடித்து விட்டு வந்த சூஸனை நிறுத்தி வைத்துக் காதைக் கடித்தோம். இந்தப் படத்தில் வித்தியாசமான சூஸனைப்பார்க்கப் போகிறார்கள் ரசிகர்கள். காமடியில் கலக்கியுள்ளேன். என்னோடு சத்யராஜ் சாரும், கவுண்டமணி சாரும் பின்னி எடுத்திருக்கிறார்கள்.

காமடி மட்டுமல்ல, கலக்கல் டான்ஸும் போட்டுள்ளேன். எனது முழுப் பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் வகையில், அட்டகாசமான கேரக்டர்இது. படம் வந்ததும் ரசித்துப் பாருங்கள் என்று கூறினார் சூஸன்.

கூட்டணி ஆட்சியாவது சூஸனைக் கரையேத்துமா, பாப்போம்!

Read more about: second innings by susan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil