ரொம்ப தைரியசாலி சூசன் சூசனை மகா தைரியசாலி என்று பாராட்டுகிறார்கள். காரணம், பசுநேசன் ராமராஜனுக்கு ஜோடியாக நடிக்க அவர் ஓ.கே.சொன்னது தான்.கேப்டன் விஜய்காந்த் மூலம் சினிமாவுக்குக் கொண்டு வரப்பட்ட சூசனுக்கு கோடம்பாக்கம் சிவப்புக் கம்பளத்தை கவிழ்த்துப்போட்டுவிட்டது. இதனால் இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு சினிமா பார்ட்டிகலைப் போய் பார்க்க ஆரம்பித்தார்.வேறு வகைகளிலும் முயற்சிகள் செய்ததில் சத்யராஜுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் தவிர வேறு ஏதும்தேறவில்லை. இந் நிலையில் எவர் கிரீன் மூவிஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் தர்மன் என்ற படத்தில் ராமராஜன் இரட்டை வேடத்தில்நடிக்கிறார். இது அவருக்கு 44வது படமாம். பார்த்தின் மாதிரி தனக்கும் ஒரு ஜோடி தேடி ஊர் ஊராய் அலைந்தார் ராமராஜன்.ஆனால், நம் ஊர் செகண்ட் ஹீரோயின்கள் கூட அவருடன் ஜோடி சேர முன் வரவில்லை. இதனால் தாவாக்கட்டையில் கைவைத்தபடி யோசனை செய்த ராமராஜனுக்கு சூசனைப் பற்றி அவரது அடிப்பொடிகள் எடுத்துச் சொல்ல, அவரை அழைத்துப்பேசியிருக்கிறார்.தனது மார்க்கெட் காய்ந்து போய் கிடந்தாலும் இவருக்கு ஜோடியா என்று ரொம்பவே யோசித்தாராம் சூசன். இதையடுத்துஅவருக்கு ரூ. 3 லட்சம் சம்பளம் தருவதாக சொன்னார்களாம். (இப்போது சூசனுக்கு ரூ. 2 லட்சம் மட்டுமே சம்பளம்.) ஆனால், இதுதான் சமயம் என்று சூசன் ரூ. 4 லட்சம் கேட்க, ஒரு வழியாக பேரம் பேசி ரூ. 3.5 லட்சத்துக்கு அவரை செட்ஆகிவிட்டாராம் பசுநேசன்.ஹீரோயின் கிடைத்த சந்தோஷத்தில் பட சூட்டிங்கைத் தொடங்கத் தயாராகிவிட்டார் கரகாட்டக்காரன். படத்தை இயக்குவதுகாவேரி வேந்தன் என்பவர். இவர் கஜினி இயக்குனர் முருகதாசிடம் அஸிஸ்டெண்டாக இருந்தவர்.இந்தப் படத்தின் துவக்க விழா நடந்தது. பிரசாத் ஸ்டுடியோவில் நடந்த அந்த விழாவுக்கு திடீரென 44 பேர் வட பழனி கோவிலில்இருந்து பால் குடத்துடன் நுழைந்தார்களாம். அவர்கள் யார் என்று விசாரித்தபோது தனது ரசிகர்கள் என்று தெரியவந்தவுடன்ரொம்பவே நெகிழ்ந்துவிட்டாராம் ராமராஜன். இந் நிலையில், ரொம்ப நாளைக்கு முன் பூஜை போடப்பட்ட மதுரைக்காரன் படத்தையும் தூசி தட்டி எடுத்து மீண்டும் அதிலும்நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார் வில்லுப்பாட்டுக்காரன்.ரோஜாவை வைத்து இவரே எடுத்த எங்க வீட்டு வேலன் படத்தில் ஒரு பாட்டும் கிளைமாக்சும் தான் பாக்கியாம். அதைஎப்படியாவது எடுத்து ரிலீஸ் பண்ணவும் முயற்சித்து வருகிறார் எங்க ஊரு பாட்டுக்காரன்.ரோஜா திடீரென கல்யாணம் பண்ணிக் கொண்டு போனதோடு அந்தப் படம் அப்படியே நின்றுவிட்டது.
கேப்டன் விஜய்காந்த் மூலம் சினிமாவுக்குக் கொண்டு வரப்பட்ட சூசனுக்கு கோடம்பாக்கம் சிவப்புக் கம்பளத்தை கவிழ்த்துப்போட்டுவிட்டது. இதனால் இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு சினிமா பார்ட்டிகலைப் போய் பார்க்க ஆரம்பித்தார்.
வேறு வகைகளிலும் முயற்சிகள் செய்ததில் சத்யராஜுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் தவிர வேறு ஏதும்தேறவில்லை.
ஆனால், நம் ஊர் செகண்ட் ஹீரோயின்கள் கூட அவருடன் ஜோடி சேர முன் வரவில்லை. இதனால் தாவாக்கட்டையில் கைவைத்தபடி யோசனை செய்த ராமராஜனுக்கு சூசனைப் பற்றி அவரது அடிப்பொடிகள் எடுத்துச் சொல்ல, அவரை அழைத்துப்பேசியிருக்கிறார்.
தனது மார்க்கெட் காய்ந்து போய் கிடந்தாலும் இவருக்கு ஜோடியா என்று ரொம்பவே யோசித்தாராம் சூசன். இதையடுத்துஅவருக்கு ரூ. 3 லட்சம் சம்பளம் தருவதாக சொன்னார்களாம். (இப்போது சூசனுக்கு ரூ. 2 லட்சம் மட்டுமே சம்பளம்.)
ஹீரோயின் கிடைத்த சந்தோஷத்தில் பட சூட்டிங்கைத் தொடங்கத் தயாராகிவிட்டார் கரகாட்டக்காரன். படத்தை இயக்குவதுகாவேரி வேந்தன் என்பவர். இவர் கஜினி இயக்குனர் முருகதாசிடம் அஸிஸ்டெண்டாக இருந்தவர்.
இந்தப் படத்தின் துவக்க விழா நடந்தது. பிரசாத் ஸ்டுடியோவில் நடந்த அந்த விழாவுக்கு திடீரென 44 பேர் வட பழனி கோவிலில்இருந்து பால் குடத்துடன் நுழைந்தார்களாம். அவர்கள் யார் என்று விசாரித்தபோது தனது ரசிகர்கள் என்று தெரியவந்தவுடன்ரொம்பவே நெகிழ்ந்துவிட்டாராம் ராமராஜன்.
ரோஜாவை வைத்து இவரே எடுத்த எங்க வீட்டு வேலன் படத்தில் ஒரு பாட்டும் கிளைமாக்சும் தான் பாக்கியாம். அதைஎப்படியாவது எடுத்து ரிலீஸ் பண்ணவும் முயற்சித்து வருகிறார் எங்க ஊரு பாட்டுக்காரன்.
ரோஜா திடீரென கல்யாணம் பண்ணிக் கொண்டு போனதோடு அந்தப் படம் அப்படியே நின்றுவிட்டது.


Click it and Unblock the Notifications