»   »  கும்பிடு போட்ட சூசன்! ரூ. 1 கோடி சம்பளம் வாங்கி ஒரு காலத்தில் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருந்த ராமராஜனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கஅப்போதைய முன்னணி நடிகைகள் பலர் ஓடோடி வந்தார்கள். ஆனால் இன்று காலம் மாறி, அவரது கோலமும் மாறி விட்டது.மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் மீண்டும் கோலிவுட்டில் புத்தெழுச்சியுடன் புறப்பட்டு வந்துள்ளார். தர்மன் என்றபடத்தில் இரு வேடத்தில் அசத்தலாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராமராஜனுக்கு இரண்டு ஜோடிகளாம். அதில் ஒரு ஜோடியாக நடிக்க ஆளே கிடைக்காமல் பெரும்பாடுபட்டார்.இதையடுத்து நெறஞ்ச மனசு ஹீரோயின் சூசனை ஒரு வழியாகப் பேசி சமாளித்து நடிக்க சம்மதம் வாங்கினார். சம்பளத்தைஉயர்த்தித் தந்தும், ஒரே செக்கில் அட்வான்ஸாகவே சம்பளத்தைக் கொடுத்தும் சூசனை புக் செய்தார்கள். மிகுந்த யோசனையுடன் தான் இந்த வாய்ப்பை சூசன் ஒப்புக் கொண்டிருந்தார். இந் நிலையில் திடீரென வாங்கிய காசைராமராஜனிடமே திருப்பித் தந்துவிட்டு படத்தில் இருந்து கழன்று கொண்டுவிட்டார் சூசன்.விஜய்காந்தோடு நடித்த நெறஞ்ச மனசு சரியாகப் போகாததால் தன்னை ராசியில்லாத நடிகை என்று கோலிவுட்முத்திரை குத்திவிட்டதை நினைதது நொந்து போயிருந்த சூசனுக்கு மறுவாழ்வு தந்தார் சத்யராஜ்.தனது வணக்கம் தலைவா படத்தில் ஜோடியாகப் போட்டார். இதில் கிளாமரில் சக்கை போடு போட்டு வரும் சூசனை கோலிவுட்ஆச்சரியமாகவே பார்க்கிறது. இவரது கிளாமர் ஸ்டில்கள் ஒவ்வொன்றாய் வெளியாக வெளியாக அவரைத் தேடி வரும்தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை மெதுவாக பிக்-அப் ஆகியிருக்கிறதாம்.இந்த நேரத்தில், மார்க்கெட் இல்லாத ராமராஜனுடன் நடித்தால் மீண்டும் வீட்டில் நிரந்தரமாகவே சும்மா இருக்க வேண்டி வரும்என்று நினைத்த சூசன், தன்னை புதைகுழியில் தானே தள்ளி விட்டுக் கொள்வதைத் தவிர்க்கவே காசைத் திருப்பித் தந்துவிட்டுராமராஜனின் படத்தில் இருந்து கழன்று கொண்டுவிட்டாராம். இதுவரை நமிதாவுக்கு வாழ்வு தந்து வந்த சத்யராஜ் இப்போது சூசனுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளாராம். இதனால் தான் கிடைத்தவாய்ப்பை வேண்டாம் என சூசன் நிராகரித்தாராம்.இதுவரை தனக்கு ஜோடி போட்ட நமிதாவை இப்போது தனது மகன் சிபிராஜுடன் சேர்த்து வைத்துவிட்ட சத்யராஜ், இப்போதுநமிதாவின் இடத்தில் சூசனை வைத்துள்ளாராம். இதனால் அடுத்தடுத்து அவரது படங்களில் சூசனுக்கு இடம் நிச்சயம்என்கிறார்கள்.இப்போது சத்யராஜுடன் நடிக்கும் படத்தில் சொன்னதை விட கூடுதலாகவே கிளாமர் காட்டி வருகிறார் சூசன். இதற்கிடையே தன்னுடன் ஜோடியாக நடிக்க சூசன் மறுத்து விட்டதால், கேரளாவில் அக்கா, தங்கை ரோல்களில் நடிக்கும் மீராகிருஷ்ணன் என்பவரை ராமராஜன் தனக்கு ஜோடியாக புக் செய்திருக்கிறார்.இவர் என்னிக்கி அட்வான்ஸைத் திருப்பித் தருவாரோ என்ற பயத்தில் இருக்கிறாராம் ராமராஜன். இதற்கிடையே அவருக்குஇன்னொரு ஹீரோயின் தேடும் வேலையும் படு தீவிரமாக நடந்து வருகிறதாம்.சுத்தம்...

கும்பிடு போட்ட சூசன்! ரூ. 1 கோடி சம்பளம் வாங்கி ஒரு காலத்தில் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருந்த ராமராஜனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கஅப்போதைய முன்னணி நடிகைகள் பலர் ஓடோடி வந்தார்கள். ஆனால் இன்று காலம் மாறி, அவரது கோலமும் மாறி விட்டது.மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் மீண்டும் கோலிவுட்டில் புத்தெழுச்சியுடன் புறப்பட்டு வந்துள்ளார். தர்மன் என்றபடத்தில் இரு வேடத்தில் அசத்தலாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராமராஜனுக்கு இரண்டு ஜோடிகளாம். அதில் ஒரு ஜோடியாக நடிக்க ஆளே கிடைக்காமல் பெரும்பாடுபட்டார்.இதையடுத்து நெறஞ்ச மனசு ஹீரோயின் சூசனை ஒரு வழியாகப் பேசி சமாளித்து நடிக்க சம்மதம் வாங்கினார். சம்பளத்தைஉயர்த்தித் தந்தும், ஒரே செக்கில் அட்வான்ஸாகவே சம்பளத்தைக் கொடுத்தும் சூசனை புக் செய்தார்கள். மிகுந்த யோசனையுடன் தான் இந்த வாய்ப்பை சூசன் ஒப்புக் கொண்டிருந்தார். இந் நிலையில் திடீரென வாங்கிய காசைராமராஜனிடமே திருப்பித் தந்துவிட்டு படத்தில் இருந்து கழன்று கொண்டுவிட்டார் சூசன்.விஜய்காந்தோடு நடித்த நெறஞ்ச மனசு சரியாகப் போகாததால் தன்னை ராசியில்லாத நடிகை என்று கோலிவுட்முத்திரை குத்திவிட்டதை நினைதது நொந்து போயிருந்த சூசனுக்கு மறுவாழ்வு தந்தார் சத்யராஜ்.தனது வணக்கம் தலைவா படத்தில் ஜோடியாகப் போட்டார். இதில் கிளாமரில் சக்கை போடு போட்டு வரும் சூசனை கோலிவுட்ஆச்சரியமாகவே பார்க்கிறது. இவரது கிளாமர் ஸ்டில்கள் ஒவ்வொன்றாய் வெளியாக வெளியாக அவரைத் தேடி வரும்தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை மெதுவாக பிக்-அப் ஆகியிருக்கிறதாம்.இந்த நேரத்தில், மார்க்கெட் இல்லாத ராமராஜனுடன் நடித்தால் மீண்டும் வீட்டில் நிரந்தரமாகவே சும்மா இருக்க வேண்டி வரும்என்று நினைத்த சூசன், தன்னை புதைகுழியில் தானே தள்ளி விட்டுக் கொள்வதைத் தவிர்க்கவே காசைத் திருப்பித் தந்துவிட்டுராமராஜனின் படத்தில் இருந்து கழன்று கொண்டுவிட்டாராம். இதுவரை நமிதாவுக்கு வாழ்வு தந்து வந்த சத்யராஜ் இப்போது சூசனுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளாராம். இதனால் தான் கிடைத்தவாய்ப்பை வேண்டாம் என சூசன் நிராகரித்தாராம்.இதுவரை தனக்கு ஜோடி போட்ட நமிதாவை இப்போது தனது மகன் சிபிராஜுடன் சேர்த்து வைத்துவிட்ட சத்யராஜ், இப்போதுநமிதாவின் இடத்தில் சூசனை வைத்துள்ளாராம். இதனால் அடுத்தடுத்து அவரது படங்களில் சூசனுக்கு இடம் நிச்சயம்என்கிறார்கள்.இப்போது சத்யராஜுடன் நடிக்கும் படத்தில் சொன்னதை விட கூடுதலாகவே கிளாமர் காட்டி வருகிறார் சூசன். இதற்கிடையே தன்னுடன் ஜோடியாக நடிக்க சூசன் மறுத்து விட்டதால், கேரளாவில் அக்கா, தங்கை ரோல்களில் நடிக்கும் மீராகிருஷ்ணன் என்பவரை ராமராஜன் தனக்கு ஜோடியாக புக் செய்திருக்கிறார்.இவர் என்னிக்கி அட்வான்ஸைத் திருப்பித் தருவாரோ என்ற பயத்தில் இருக்கிறாராம் ராமராஜன். இதற்கிடையே அவருக்குஇன்னொரு ஹீரோயின் தேடும் வேலையும் படு தீவிரமாக நடந்து வருகிறதாம்.சுத்தம்...

Subscribe to Oneindia Tamil
ரூ. 1 கோடி சம்பளம் வாங்கி ஒரு காலத்தில் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருந்த ராமராஜனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கஅப்போதைய முன்னணி நடிகைகள் பலர் ஓடோடி வந்தார்கள். ஆனால் இன்று காலம் மாறி, அவரது கோலமும் மாறி விட்டது.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் மீண்டும் கோலிவுட்டில் புத்தெழுச்சியுடன் புறப்பட்டு வந்துள்ளார். தர்மன் என்றபடத்தில் இரு வேடத்தில் அசத்தலாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ராமராஜனுக்கு இரண்டு ஜோடிகளாம். அதில் ஒரு ஜோடியாக நடிக்க ஆளே கிடைக்காமல் பெரும்பாடுபட்டார்.

இதையடுத்து நெறஞ்ச மனசு ஹீரோயின் சூசனை ஒரு வழியாகப் பேசி சமாளித்து நடிக்க சம்மதம் வாங்கினார். சம்பளத்தைஉயர்த்தித் தந்தும், ஒரே செக்கில் அட்வான்ஸாகவே சம்பளத்தைக் கொடுத்தும் சூசனை புக் செய்தார்கள்.

மிகுந்த யோசனையுடன் தான் இந்த வாய்ப்பை சூசன் ஒப்புக் கொண்டிருந்தார். இந் நிலையில் திடீரென வாங்கிய காசைராமராஜனிடமே திருப்பித் தந்துவிட்டு படத்தில் இருந்து கழன்று கொண்டுவிட்டார் சூசன்.

விஜய்காந்தோடு நடித்த நெறஞ்ச மனசு சரியாகப் போகாததால் தன்னை ராசியில்லாத நடிகை என்று கோலிவுட்முத்திரை குத்திவிட்டதை நினைதது நொந்து போயிருந்த சூசனுக்கு மறுவாழ்வு தந்தார் சத்யராஜ்.

தனது வணக்கம் தலைவா படத்தில் ஜோடியாகப் போட்டார். இதில் கிளாமரில் சக்கை போடு போட்டு வரும் சூசனை கோலிவுட்ஆச்சரியமாகவே பார்க்கிறது. இவரது கிளாமர் ஸ்டில்கள் ஒவ்வொன்றாய் வெளியாக வெளியாக அவரைத் தேடி வரும்தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை மெதுவாக பிக்-அப் ஆகியிருக்கிறதாம்.

இந்த நேரத்தில், மார்க்கெட் இல்லாத ராமராஜனுடன் நடித்தால் மீண்டும் வீட்டில் நிரந்தரமாகவே சும்மா இருக்க வேண்டி வரும்என்று நினைத்த சூசன், தன்னை புதைகுழியில் தானே தள்ளி விட்டுக் கொள்வதைத் தவிர்க்கவே காசைத் திருப்பித் தந்துவிட்டுராமராஜனின் படத்தில் இருந்து கழன்று கொண்டுவிட்டாராம்.

இதுவரை நமிதாவுக்கு வாழ்வு தந்து வந்த சத்யராஜ் இப்போது சூசனுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளாராம். இதனால் தான் கிடைத்தவாய்ப்பை வேண்டாம் என சூசன் நிராகரித்தாராம்.

இதுவரை தனக்கு ஜோடி போட்ட நமிதாவை இப்போது தனது மகன் சிபிராஜுடன் சேர்த்து வைத்துவிட்ட சத்யராஜ், இப்போதுநமிதாவின் இடத்தில் சூசனை வைத்துள்ளாராம். இதனால் அடுத்தடுத்து அவரது படங்களில் சூசனுக்கு இடம் நிச்சயம்என்கிறார்கள்.

இப்போது சத்யராஜுடன் நடிக்கும் படத்தில் சொன்னதை விட கூடுதலாகவே கிளாமர் காட்டி வருகிறார் சூசன்.

இதற்கிடையே தன்னுடன் ஜோடியாக நடிக்க சூசன் மறுத்து விட்டதால், கேரளாவில் அக்கா, தங்கை ரோல்களில் நடிக்கும் மீராகிருஷ்ணன் என்பவரை ராமராஜன் தனக்கு ஜோடியாக புக் செய்திருக்கிறார்.

இவர் என்னிக்கி அட்வான்ஸைத் திருப்பித் தருவாரோ என்ற பயத்தில் இருக்கிறாராம் ராமராஜன். இதற்கிடையே அவருக்குஇன்னொரு ஹீரோயின் தேடும் வேலையும் படு தீவிரமாக நடந்து வருகிறதாம்.

சுத்தம்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil