அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணியே ஆகணும்.. 19 வயசுல ரூமுக்கு அழைத்த தயாரிப்பாளர்.. பிக் பாஸ் பிரபலம் பகீர்!

மும்பை: நடிகைகள் பற்றி ஒரு பக்கம் தவறாக பேசக் கூடாது என பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பல நடிகைகள் தங்களுக்கு சினிமாவிலேயே அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு என வெளிப்படையாக பேசியும் முன்னணி நடிகர்கள் அது பற்றி மூச்சே விடாமலும் நடிகைகளுக்கு பாதுகாப்பு வழங்காமலும் இருந்து வருகின்றனர்.

ஒரு படத்தில் ஹீரோயினாக கமிட் ஆக தயாரிப்பாளர், அந்த படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ணும் ஃபைனான்ஸியர், இயக்குநர் மற்றும் ஹீரோ என பலருடன் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண சொல்வதாக பல முன்னணி நடிகைகளே பேசியுள்ளனர்.

Sushant Singh Ex Lover Ankita Lokhande reveals how she faced casting couch at the age of 19

மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான அங்கிதா லோகாண்டே தனக்கு பாலிவுட்டில் ஏற்பட்ட Casting Couch அனுபவத்தை சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசி பகீர் கிளப்பி உள்ளார்.

சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி: 1984ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் எனும் ஊரில் பிறந்த அங்கிதா லோகாண்டேவுக்கு தற்போது 39 வயதாகிறது. சுஷாந்த் உடன் இணைந்து பவித்ர ரிஷ்டா எனும் தொடரில் இவர் நடித்த போது இருவரும் காதலித்து வந்தனர். 2010ம் ஆண்டு டேட்டிங் செய்ய ஆரம்பித்த இருவரும் 2016ல் ஒரு பேட்டியில், திருமணம் செய்துக் கொள்ளப் போகிறோம் என்றே கூறினர். ஆனால், அதன் பின்னர் சில பல காரணங்களுக்காக பிரேக்கப் செய்து பிரிந்தனர். சுஷாந்த் சிங் மரண செய்தியை அறிந்து மனம் வருந்தி அங்கிதாவும் சில போஸ்ட்டுகளை பதிவிட்டு இருந்தார். விக்கி ஜெயின் என்பவரை கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

பிக் பாஸ் போட்டியாளர்: பிக் பாஸ் சீசன் 17ல் போட்டியாளராக அங்கிதா லோகாண்டே கலந்து கொண்டார். 2வது ரன்னர் அப்பாகவும் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை பெற்று இவர் வந்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் டிவி சீரியல்களில் நடித்து வந்த இவர் கங்கனா ரனாவத் இயக்கி நடித்த மணிகர்ணிகா படத்தில் நடித்துள்ளார். மேலும், பாகி 3 படத்திலும் நடித்துள்ளார். அதிகளவில் பாலிவுட் படங்களில் நடிக்காமல் டிவி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் மட்டுமே நடிப்பது ஏன் என்கிற கேள்வி இவரிடம் சமீபத்திய பேட்டியில் முன் வைக்கப்பட்டது.

19 வயதிலேயே அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை: டிவி சீரியலுக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் தான் வாய்ப்புகளை தேடி வந்தேன். ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடிக்க கமிட் ஆனானேன். மும்பையில் நடைபெற்ற ஆடிஷனுக்கு நானும் எனது கோ-ஆர்டினேட்டரும் சென்றிருந்தோம். அப்போது, என்னுடன் வந்த நபரை வெளியே நிற்க வைத்து விட்டு என்னை மட்டும் உள்ளே அழைத்து பேசினர். இந்த படத்தில் நீங்க தான் ஹீரோயின் என சொல்லி விட்டு, கொஞ்சம் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்றனர்.

படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்: அப்போ எனக்கு வெறும் 19 வயதுதான் ஆனது. எப்படி இப்படி அசிங்கமா கேட்பாங்கன்னு கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல. ஒரு மாதிரி லோ ஆகிட்டேன். உடனே முடியாது என அங்கிருந்து எழுந்து விட்டேன். கூடுதலாக பணமும் கிடைக்கும் என கன்வின்ஸ் செய்தனர். உங்க படத்துக்கு திறமையான நடிகை வேண்டும் என நினைத்து வந்தேன். ஆனால், உங்க தயாரிப்பாளருக்கு படுக்க ஒரு பொண்ணு தான் வேண்டும் என்றால் என்னை விட்ருங்க என கடுமையாக திட்டிவிட்டே வந்து விட்டேன். அதன் பின்னர் படங்களில் நடிக்கவே வேண்டாம் என சின்னத்திரை பக்கம் வந்து விட்டேன் என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X