»   »  இடுப்பில் புலி டாட்டூ வரைந்துகொண்ட பிரபல நடிகை!

இடுப்பில் புலி டாட்டூ வரைந்துகொண்ட பிரபல நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
புலி உருமுது சுஷ்மிதா இடுப்புல!- வீடியோ

மும்பை : முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இந்நிலையில், புதிதாக தனது முதுகின் கீழ்ப்பகுதியில் டாட்டூ வரைந்து கொண்டிருக்கிறார் சுஷ்மிதா.

தமிழில் நாகார்ஜூனா நடித்த 'ரட்சகன்' படத்தில் அறிமுகமானார் சுஷ்மிதா. அதன்பிறகு இந்தியா முழுக்க பல மொழிகளிலும் பரவலாக நடித்து வந்தார். ஆனால் சமீபகாலமாக அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.

அவ்வப்போது தனது ஹாட்டான படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் அவர், தான் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட வொர்க்-அவுட் வீடியோ ஒன்று செம வைரலானது.

Sushmita sen draws a tattoo in her hip

அந்த வகையில், தற்போதும் அவர் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு போட்டோவில் தனது இடுப்பில் டாட்டூ வரைந்துள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் சுஷ்மிதா சென்.

புலியும், தாமரையும் இந்த டாட்டூவில் இடம்பெற்றுள்ளன. அந்த டாட்டூவைப் பார்த்த இளைஞர்கள் சுஷ்மிதாவை கிண்டல் செய்து கமென்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள். ரசிகர்கள் பலரும் சுஷ்மிதா கேரக்டருக்கு புலி டாட்டூ பொருத்தமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

English summary
Sushmita Sen has always been active on his Instagram page. In this case, Sushmita is drawing a new tattoo on the bottom of his back. Tiger and Lotus are present in this Tattoo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X