வெள்ளை மணல் நீலக்கடல்... மாலத்தீவில் ஹாட் ரெட் பிகினியில் சுஷ்மிதா சென்
சென்னை: நடிகை சுஷ்மிதா சென் அவருடைய மகள்கள் மற்றும் காதலரோடு மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுஷ்மிதா சென்னின் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் அவருடைய மகள்களோடும், காதலரோடும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களால் நிரம்பி வழிகிறது.
1994ஆம் ஆண்டில் மிஸ் யூனிவெர்ஸ் பட்டம் வென்றவர் நடிகையும் மாடல் அழகியுமான சுஷ்மிதா சென். அவர் சில இந்திப்படங்களிலும், தமிழில் ரட்சகன் படத்திலும், பின்னர் முதல்வன் படத்திலும் நடித்துள்ளார். சுஷ்மிதா சென் எப்போதுமே தனது வாழ்வில் நிகழும் அனைத்து சம்பவங்களையும் ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் தெரியப்படுத்துவதையும், அப்டேட் செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளவர்.

சுஷ்மிதா சென் தற்போது அவருடைய குடும்பத்தினருடன் விடுமுறைக்காக மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் மிகவும் சந்தோஷமாக கொண்டாடி வருகிறார். அவர் தற்போது அவருடைய மகள்கள் மற்றும் காதலரோடு மாலத்தீவில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் துணுக்குகளை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பல சமூக வலைதளங்களில் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் அவருடைய மகள்களோடும், காதலரோடும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களால் நிரம்பி வழிகிறது.
ஒரு ஹாட் சிகப்பு நிற பிகினி டாப் மற்றும் கருப்பு நிற ஷார்ட் ஸ்கர்ட் ஒன்றை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட கிளிக் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். விடுமுறை நாட்களில் கூட தனது சந்தோஷ தருணங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார் சுஷ்மிதா சென்.
தற்போது 43 வயதாகும் சுஷ்மிதா சென் பல போஸ்களில் தோற்றங்களில் காமெரா லென்ஸுடன் காதல் கொண்டு வித்தியாசமாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த கிளிக்குகளில் மாலத்தீவின் அழகிய வெள்ளை மணல், மேக கூட்டங்கள், நீல கடல் என்று பார்க்கவே மிகவும் ரம்மியான ஒரு சூழலாக இருக்கிறது.
இந்த அற்புதமான புகைப்படங்களை பார்த்தால் நமக்கும் இருக்கும் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உடனே கடற்கரைக்கு செல்ல வேண்டும் என்பது போல தோன்றுகிறது. நமக்கும் இது போன்ற ஒரு இடமான விடுமுறை கிடைத்தால் எப்படி இருக்கும்.


Click it and Unblock the Notifications











