சுஷ்மிதா சென்னும், 2 குட்டி தேவதைகளும்
மும்பை: பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென் பெருமையாக நினைப்பது தனது மகள்களை தான்.
1997ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்றபோது பிரபஞ்ச அழகி பட்டம் பெற்று இந்திாயவுக்கு பெருமை தேடித் தந்தவர் சுஷ்மிதா சென். பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் சுஷ்மிதா.
38 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்.

மகள்கள்
சுஷ்மிதா தனது மகள்களுடன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மூத்த மகள் ரினி பாட்டு பாடினார்.

ரினி
சுஷ்மிதா தனது 25வது வயதில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து ரினி என்று பெயர் வைத்தார். திருமணமாகாத சுஷ் குழந்தையை தத்தெடுப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் சுஷ்மிதாவுக்கு சாதமாக தீர்ப்பு வந்தது.

படிப்பு
தற்போது 14 வயதாகும் ரினி இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் லண்டன் சென்று அங்குள்ள பள்ளியில் படிக்கவிருக்கிறார்.

அலிஷா
கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி சுஷ்மிதா 3 மாத பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்தார். அந்த குழந்தைக்கு அலிஷா என்று பெயர் வைத்தார்.

ஐஸ்கிரீம் டேட்
ரினியும், அலிஷாவும் அம்மா சுஷ்மிதாவுடன் வெளியே சென்று ஐஸ்கிரீம் சாப்பிடத் தான் இந்த கெட்டப்பில் கிளம்பியிருக்கிறார்கள்.

மகள்களே உலகம்
சுஷ்மிதா சென்னுக்கு ரினியும், அலிஷாவும் தான் உலகமாக உள்ளனர். அலிஷாவுக்கு தற்போது 4 வயதாகிறது.

ஜாலி பயணம்
தனது வேலைகளுக்கு இடையே சுஷ்மிதா மகள்களை அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றபோது எடுத்த படம்.

விமான நிலையம்
மகள்களுடன் சுஷ்மிதா விமான நிலையத்தில் வந்தபோது எடுத்த படம். புகைப்படக்காரர்களை கண்கொட்டாமல் பார்க்கும் அலிஷா.

காதல்
சுஷ்மிதா சென் வாழ்க்கையில் காதல் வந்து போனது. ஆனால் அவர் தனது மகள்களை தான் வாழ்க்கையாக நினைக்கிறார்.

குட்டி பாப்பா
அலிஷா குட்டிப் பாப்பாவாக இருந்தபோது எடுத்த படம். பெண் குழந்தைகளை பாரமாக நினைக்கும் காலத்தில் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் சுஷ் பாராட்டுக்குரியவரே.

எங்க வாக் எப்படி?
பேஷன் ஷோ ஒன்றில் மகள்களுடன் அசத்தலாக ரேம்ப் வாக் செய்த சுஷ்மிதா.


Click it and Unblock the Notifications











