யோகா செய்து கலக்கிய ஷக்க லக்க பேபி.. வைரல் வீடியோ!

சென்னை : நடிகை சுஷ்மிதா சென் யோகாசனம் செய்யும் வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

முன்னாள் மிஸ் யூனிவெர்சும், நடிகையுமான சுஷ்மிதா சென் பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவர் நடித்து மெகா ஹிட்டான "ரட்சகன்"படம் அனைவரும் ரசித்த ஒன்று. ஷங்கரின் முதல்வன் படத்திலும் "ஷக்க லக்க பேபி " என்ற ஒரு பாடலுக்கு ஆடியது அவர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவருக்கு ரெனீ சென், அலிஷாஹ் சென் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

 Sushmita sen yoga goes viral

நடிப்பு மட்டும் இல்லாமல் பல பொது சமூக சேவையில் ஈடுபடுவதும் அவரது அன்றாட வழக்கம். பொதுவாகவே இவர் மிகவும் தைரியமான கேரக்டர் என்று பலரும் கூறுவார்கள். யோகாசனம் செய்வதும், உடற்பயிற்சி செய்வதும் இவருக்கு மிகவும் பிடித்தவை. தோல்வி ஏற்பட்டாலும் மீண்டும் மீண்டும் செய்து அதில் வெற்றி காண்பது இவரின் குணாதிசயம். இந்த ஊரடங்கில் பல யோகாசனங்களை செய்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அவர் செய்த இந்த யோகாசனம் பலமுறை செய்தும், தன்னால் செய்ய முடியவில்லை, ஆனால் தற்போது தான் அதை மிக சரியாக வந்து இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் தன் ரசிகர்களையும் அவர் அதனை ட்ரை பண்ணுங்க என்று கூறி வருகிறார். அதற்கு பல லைக்ஸ் மற்றும் பல சூப்பரான கமெண்ட்ஸும் வந்துகொண்டிருக்கிறது. யோகாசனத்தின் பெருமைகளை இந்திய பிரதமர் மோடி முதல் நடிகர்கள் வரை சொல்லி கேட்டு இருப்போம். அவர்கள் செய்யும் யோகாசனங்கள் வைரல் விடியோக்களாக வளம் வந்ததும் நாம் பார்த்திருப்போம்.

 Sushmita sen yoga goes viral

பல நடிகைகள் ஊரடங்கு நேரத்தில் உடற்பயிற்சி ,மற்றும் யோகாசனம் செய்யும்போட்டோக்களையும்,விடியோக்களையும் வெளியிட்டு இருந்தாலும் இவர் வெளியிடும் பதிவுகள் அனைத்தும் தனித்துவமாக இருப்பது இவரது பாசிட்டிவ் ய, மிஸ் யூனிவெர்ஸ் வெளியிட்ட போட்டோக்கு எப்பவுமே தனி மவுசு தான் என்றும் பல சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். அவர் சொன்ன மாதிரி இந்த யோகாசனத்தை அனைவரும் செய்வார்கள் என்று நாம் நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X