»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா மாப்பிள்ளையைக் கட்டிக் கொண்டு அமெரிக்கா போன சுவலட்சுமி மீண்டும் நடிக்க வருகிறார்.

ஆசையில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ள சுவலட்சுமிக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் டிவி சீரியில்நடிக்க ஆரம்பித்தார்.

இந் நிலையில் திடீரென்று கொல்கத்தா மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து கொண்டுஅமெரிக்கா போனார்.

ஆனால் அமெரிக்கா போனாலும் நடிப்பு ஆசை விடவில்லையாம். இதனால் மாதத்தில் பாதி நாட்கள் சென்னையில்தான் சுற்றிக் கொண்டுள்ளார். டிவி சீரியலில் மட்டுமல்லாது, படங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.

ஹீரோயினாக கிடைக்கவிட்டாலும் கூட அண்ணி, அக்கா வேடமாவது குடுங்க என்று கேட்டு சினிமாகம்பெனிகளில் படிகளில் ஏறி, இறங்கி வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil