குவிகிறது கண்டனம்.. 4 வயது சிறுவனை ஆபாசமாக திட்டிய தனுஷ் பட நடிகை!

தனுஷ் நடிப்பில் வெளியான அம்பிகாபதி படத்தில் துணை நடிகையாக நடித்த சுவாரா பாஸ்கர், 4வயது குழந்தை நட்சத்திரத்தை ஆபாசமாக திட்டியதை அறிந்த நெட்டிசன்கள், சுவாரா பாஸ்கரை டிரோல் செய்து வருகின்றனர்.

Recommended Video

குழந்தையை திட்டிய ஸ்வாரா பாஸ்கர்! நெட்டிசன்கள் கொந்தளிப்பு

மும்பை: சர்ச்சைக்கும் நடிகை சுவாரா பாஸ்கருக்கும் அப்படி ஒரு இணை பிரியாத பந்தம் போல, எப்போதும், ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவதே வேலையாக கொண்டிருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் வெளியான அம்பிகாபதி படத்தில் துணை நடிகையாக நடித்த சுவாரா பாஸ்கர், 4வயது குழந்தை நட்சத்திரத்தை ஆபாசமாக திட்டியதை அறிந்த நெட்டிசன்கள், சுவாரா பாஸ்கரை டிரோல் செய்து வருகின்றனர்.

மாட்டிக்கிட்டியே பங்கு

மாட்டிக்கிட்டியே பங்கு

சன் ஆஃப் அபிஷ் எனும் காமெடி டாக் ஷோவில் கலந்து கொண்ட நடிகை சுவாரா பாஸ்கர், தனது நடிப்பு அனுபவத்தை நிகழ்ச்சி தொகுப்பாளர் அபிஷ் மேத்யூவிடம் பகிர்ந்து வந்தார். அப்போது, தான் நடிக்க ஆரம்பித்த காலத்தில், ஒரு விளம்பரம் பட ஷூட்டிங் தன்னை மிகவும் வருத்தமடைய செய்ததாக கூறினார். ஏன் என்று அபிஷ் கேட்டதற்கு, ஒரு 4 வயது குழந்தை நட்சத்திரம் தன்னை ஆன்டி என கூறியதால், அவனை ஆபாசமாக திட்டி விட்டதாக அந்த வார்த்தைகளையும் ஷோவில் கூறி மாட்டிக்கிட்டார்.

சுவாரா ஆன்டி

சுவாரா ஆன்டி

ஆன்டி என கூறியதற்காக ஒரு 4 வயது சிறுவனை இப்படியா கெட்டவார்த்தையால் திட்டுவது என சுவாரா பாஸ்கரை நெட்டிசன்கள் கண்டித்தனர். மேலும், #Swara_aunty எனும் ஹேஷ்டேகை இந்தியளவில் டிரெண்ட் செய்து சுவாரா பாஸ்கருக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

புகார்

புகார்

சிறுவனை ஆபாசமாக சுவாரா பாஸ்கர் திட்டிய விவகாரம் பாலிவுட் முழுவதும் வைரலானது. டிரோல், மீம், ஹேஷ்டேக் டிரெண்டிங் என ஒரு புறம் சுவாரா பாஸ்கரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கிய நிலையில், மற்றொரு புறம், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையத்திடம் புகார் கொடுத்து ஸ்வாரா பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சை நாயகி

சர்ச்சை நாயகி

சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா படுகோனை வைத்து பத்மாவத் படத்தை பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார். அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் உடன்கட்டை ஏறுதல் குறித்து, சஞ்சய் லீலா பன்சாலியை கடுமையாக விமர்சித்து கடிதம் ஒன்றை வெளியிட்டு சுவாரா பாஸ்கர் கடும் சர்ச்சையில் சிக்கினார். தனது பெண் குறி போல படம் இருப்பதாக மிகவும் கடுமையான சொற்கள் கொண்டு விமர்சித்ததால், பாலிவுட்டில் பல வாய்ப்புகளை சுவாரா இழக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X