»   »  கொப்பளிக்கும் சொர்ணமால்யா

கொப்பளிக்கும் சொர்ணமால்யா

Subscribe to Oneindia Tamil

சொர்ணமால்யா படு ஜாலியாக இருக்கிறார். சங்கர மட சர்ச்சை, கல்யாணகலாட்டாக்கள் எல்லாம் ஓய்ந்து இப்போது முழுக்க முழுக்க நடனத்தில் தீவிர கவனம்செலுத்த ஆரம்பித்துள்ளார் சொர்ணமால்யா.

டிவி தொகுப்பாளினியாக வந்து தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டவர் சொர்ணமால்யா. அந்த பிரபலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளையும்தேடித் தந்தது.

பிரபு தேவாவுடன் முதல் படத்தில் ஜோடி போட்ட சொர்ணமால்யா அடுத்தடுத்துபடங்களில் நடிக்க ஆர்வம் கொண்டார். ஆனால் அதற்கு ஆத்துக்காரர் வடிவில்எதிர்ப்புக் கிளம்பியதால் சினிமாதான் பெரிது, கல்யாணம் சாதாரணம் என்று கணவரைவிட்டுப் பிரிந்து கோலிவுட்டில் தஞ்சம் புகுந்தார்.

இந்த நிலையில்தான் சங்கர மட சர்ச்சையில் சிக்கினார் சொர்ணமால்யா. அவரைப்பற்றி ஏகப்பட்ட வதந்திகள். எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி விட்டு சினிமாவில்தீவிர கவனம் செலுத்தினார்.

ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு படத்தில் அவர் காட்டிய கிளாமர் விஸ்வரூபத்தால்பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து கிளாமராகவும் நடிப்பேன் என்றுஸ்டேட்மெண்ட் விட்ட சொர்ணா, யுகா படத்திலும் தலை காட்டினார்.

இருந்தாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் தனக்குத் தெரிந்தஇன்னொரு துறையான நடனத்தில் ஐக்கியமானார்.

சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி கதாபாத்திரத்தை மையமாக வைத்து நம்மைமறந்தாரை நாம் மறக்க மாட்டோம் என்ற பெயரில் முழு நீள நாட்டிய நாடகத்தைசென்னையில் சில மாதங்களுக்கு முன்பு நடத்தி அசத்தினார்.

பெரும் பாராட்டைப் பெற்ற அந்த நாடகத்தால் உற்சாகமடைந்த சொர்ணா தொடர்ந்துஅதுபோன்ற நாட்டிய நாடகங்களை அரங்கேற்ற முடிவு செய்துள்ளார். ஹாயான மனநிலையில் இருந்த சொர்ணமால்யா தனது சந்தோஷத்தை இப்படிப் பகிர்ந்துகொண்டார்.

எப்போதும் இளமையாய், புதுமையாய் இருப்பதுதான் எனக்குப் பிடிக்கும். எதையும்நான் திட்டமிட்டு செய்வதில்லை. எதிர்பார்ப்புகளும் அதிகம் இல்லை. இதனால்ஏமாற்றங்களும் இல்லை.

நியாயமான சந்தோஷங்களுக்காக வாழ வேண்டும். அப்படித்தான் நானும் வாழ்ந்துவருகிறேன். எனவே பெரிதாக இழப்பு என்று எதுவும் இல்லை.

எனது முதல் நாட்டிய நாடகம் எனக்கு ரொம்ப நிறைவைக் கொடுத்தது. கிட்டத்தட்டமாதவியாகவே வாழ்ந்தேன் என்று சொல்லலாம். எல்லோருமே மாதவியை நெகட்டிவ்கேரக்டராகத்தான் பார்க்கிறார்கள்.ஆனால் அப்படி இல்லை.

அவள் ஒரு அற்புதமான பெண். ரொம்ப சீரியஸா போறேளே என்று சொர்ணாவைக்கலாய்த்தபோது, ஓ.கே இப்ப கால்பந்து டைம். எனக்கு பெரிய அளவில் அதில்நாட்டம் இல்லாவிட்டாலும் இரண்டு வீரர்களை எனக்குப் பிடிக்கும்.

ஒருத்தர் பெக்காம். இங்கிலாந்து கேப்டனான இவருடைய ஹேர் ஸ்டைல் என்னைக்கவர்ந்து விட்டது. நம்ம ஊர் டோணி கூட நல்லாதான் முடி வளர்த்திருக்கிறார்.அப்புறம் இன்னொரு இங்கிலாந்து வீரரான ரூனி என்றார் ஸ்போர்ட்டிவாக.

கலகலப்பான பொண்ணு நீங்க. எப்பவும் எப்படி இருக்க முடிகிறது இப்படி என்றுகொக்கி போட்டபோது, மனசாட்சியைத் தாண்டி நாம எதுவும் செய்யக் கூடாது.அப்படி இருந்தாலே ஆட்டோமேட்டிகாக மனதுக்குள் ஒரு ஜாலி உணர்வு வந்துவிடும்.

அப்புறம் என்ன கலகலப்பாக இருக்க வேண்டியதுதான், கலாய்க்க வேண்டியதுதான்,கலக்க வேண்டியதுதான் என்கிறார் சொர்ணா கூலாக.

சினிமாவுக்கும், டிவிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சினிமாவுக்கு என்ன தேவை,டிவிக்கு என்ன தேவை என்பதை நான் தெளிவாக புரிந்திருக்கிறேன். இதனால் எதைஎப்படிச் செய்ய வேண்டும் என்பதில் எனக்குக் குழப்பம் ஏற்பட்டதில்லை.

அதேசமயம் டிவி நாடகங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை.

கிளாமர் அதிகம் காட்டினீர்களே இடையில்? அது அந்தப் படத்திற்குத்தேவைப்பட்டதால் செய்தேன். தொடர்ந்து செய்யவில்லையே?

மேலும், சினிமா என்பதே ஒரு கவர்ச்சிகரமான விஷயம்தான். அங்கே போய் சமூகசேவை எல்லாம் செய்ய முடியாது. கதை எப்படியோ, அப்படித்தான் நாம் இருக்கமுடியும். முடிந்தால் செய்யலாம், முடியாவிட்டால் விலகிக் கொள்ளலாம் என்கிறார்எதார்த்தமாக.

சொர்ணமால்யா தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். அதேசமயம்,நடனத்தையும் சைட் பை சைடாக கொண்டு போகப் போகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil