»   »  சொர்ணமால்யாவின் விஸ்வரூபம் சங்கர மட சங்கடங்கள், ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு படத்தால் ஏற்பட்ட சென்சார் சிக்கல்கள் என சர்ச்சைகளில் தொடர்ந்துசிக்கி வந்த காந்த உடல் அழகி சொர்ணமால்யா இப்போது புத்துணர்ச்சியுடன், புதுத் தெம்புடன் தனது திறமைகளைஒவ்வொன்றாக எடுத்து விடத் தயாராகி வருகிறார்.சன் டிவியில் இளமை புதுமை என்ற வித்தியாசமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சொர்ணமால்யா பின்னர் சினிமாவில்நுழைந்தார். மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தில் ஷாலினிக்கு அக்கவாக வந்து போனார். அதில் கிடைத்த அறிமுகத்தால் அவருக்கு எங்கள் அண்ணா படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தது.இதுதான் அவரது வாழ்க்கையில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்திய படம். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், தொடர்ந்து வந்த சங்கர மட விவகாரங்கள் என சிக்கலில் சிக்கித்தவித்தார் சொர்ணா. ஆனால் அவையெல்லாம் பனி போல விலகி ஓடின. இதையடுத்து முழு வீச்சில் சினிமா வாய்ப்புகளைத் தேடத் தொடங்கிய சொர்ணாவுக்குக் கிடைத்தது ஸாரி எனக்குகல்யாணமாயிடுச்சு. இப்படத்தில் கிளாமரில் விஸ்வரூபம் எடுத்து தனது முழுத் திறமைகளையும் காட்டி அசத்தினார். சென்சாரில் சிக்கித் தவித்த சொர்ணாவின் பல கிளாமர் காட்சிகள், கத்திரிக்கோலுக்கு இரையாகி வெட்டித் தள்ளப்பட்டன. மிச்சம்மீதி இருந்த காட்சிகளுடன் சமீபத்தில் படம் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்றது. இருந்தாலும் கவலைப்படாத சொர்ணா இப்போது படு ஃபிரஷ்ஷாக சில படங்களில் நடித்து வருகிறார். யுகா, அழகு நிலையம்ஆகிய படங்களில் அவருக்கு நல்ல ரோல்கள் என்கிறார் சொர்ணா. அதை விட அவர் அதிகம் எதிர்பார்ப்பது சத்யராஜுடன்நடித்து வரும் சிவலிங்கம் ஐ.பி.எஸ். படத்தைத்தான். இதில் அதிரடி காவல்துறை அதிகாரியாக புகுந்து விளையாடியுள்ளாராம். ஆக்ஷன் காட்சிகளுடன் அசத்தி வரும் சொர்ணா,இந்தப் படம் வந்தால் தன்னால் எப்படிப்பட்ட கேரக்டரிலும் நடிக்க முடியும் என்று எல்லோருக்கும் தெரிய வரும் என்று படுதெம்பாக கூறுகிறார். இதுதவிர சமீபத்தில் சென்னையில் ஒரு நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினார் சொர்ணா. நம்மை மறந்தாரை நாம் மறவோம்என்ற தலைப்பில் இந்த நாட்டிய நாடகம், மாதவியின் கதையை கருவாகக் கொண்டது. மாதவியாக சொர்ணாவே நடித்தார். இந்த நாடகத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால்,சொர்ணா சந்தோஷமாகியுள்ளார்.எனக்கு சிலப்பதிகாரத்தில் மிகவும் பிடித்த கேரக்டர் மாதவி தான். மாதவி அவ்வளவு அழகு. இதை இளங்கோவடிகளேசிலப்பதிகாரத்தில் அவ்வளவு அற்புதமாக வர்ணித்துள்ளார். சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலைப் படித்தபோது இதை என்னால் உணர முடிந்தது. இதனால் மாதவி மீது எனக்கு காதலேபிறந்து விட்டது. அதனால் தான் நான் அரங்கேற்றிய முதல் நாட்டிய நாடகத்தின் கதாநாயகியாக மாதவியை வைத்தேன். தன்னிடமிருந்து பிரிந்து சென்ற கோவலினிடம் மாதவி பேசிய கடைசி வாசகம் தான் நம்மை மறந்தாரை நாம் மறவோம் என்றவாசகம். அதையே எனது நாடகத்தின் தலைப்பாக வைத்து விட்டேன் என்று கூறி நிறுத்தினார் சொர்ணா. தொடர்ந்து இதுபோல நாடகங்களை நடத்தப் போவதாகவும், மறுபக்கம் சினிமாவிலும் புகுந்து விளையாடப் போவதாகவும்புன்னகையுடன் கூறுகிறார் இந்த புதுமை நாயகி சொர்ணா. இரட்டைக் குதிரை சவாரிதான் என்றாலும் சவாரி சொகுசாகவேஇருக்கும் என்கிறது சொர்ணாவின் அந்த பொருள் பொதிந்த புன்னகை.

சொர்ணமால்யாவின் விஸ்வரூபம் சங்கர மட சங்கடங்கள், ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு படத்தால் ஏற்பட்ட சென்சார் சிக்கல்கள் என சர்ச்சைகளில் தொடர்ந்துசிக்கி வந்த காந்த உடல் அழகி சொர்ணமால்யா இப்போது புத்துணர்ச்சியுடன், புதுத் தெம்புடன் தனது திறமைகளைஒவ்வொன்றாக எடுத்து விடத் தயாராகி வருகிறார்.சன் டிவியில் இளமை புதுமை என்ற வித்தியாசமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சொர்ணமால்யா பின்னர் சினிமாவில்நுழைந்தார். மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தில் ஷாலினிக்கு அக்கவாக வந்து போனார். அதில் கிடைத்த அறிமுகத்தால் அவருக்கு எங்கள் அண்ணா படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தது.இதுதான் அவரது வாழ்க்கையில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்திய படம். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், தொடர்ந்து வந்த சங்கர மட விவகாரங்கள் என சிக்கலில் சிக்கித்தவித்தார் சொர்ணா. ஆனால் அவையெல்லாம் பனி போல விலகி ஓடின. இதையடுத்து முழு வீச்சில் சினிமா வாய்ப்புகளைத் தேடத் தொடங்கிய சொர்ணாவுக்குக் கிடைத்தது ஸாரி எனக்குகல்யாணமாயிடுச்சு. இப்படத்தில் கிளாமரில் விஸ்வரூபம் எடுத்து தனது முழுத் திறமைகளையும் காட்டி அசத்தினார். சென்சாரில் சிக்கித் தவித்த சொர்ணாவின் பல கிளாமர் காட்சிகள், கத்திரிக்கோலுக்கு இரையாகி வெட்டித் தள்ளப்பட்டன. மிச்சம்மீதி இருந்த காட்சிகளுடன் சமீபத்தில் படம் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்றது. இருந்தாலும் கவலைப்படாத சொர்ணா இப்போது படு ஃபிரஷ்ஷாக சில படங்களில் நடித்து வருகிறார். யுகா, அழகு நிலையம்ஆகிய படங்களில் அவருக்கு நல்ல ரோல்கள் என்கிறார் சொர்ணா. அதை விட அவர் அதிகம் எதிர்பார்ப்பது சத்யராஜுடன்நடித்து வரும் சிவலிங்கம் ஐ.பி.எஸ். படத்தைத்தான். இதில் அதிரடி காவல்துறை அதிகாரியாக புகுந்து விளையாடியுள்ளாராம். ஆக்ஷன் காட்சிகளுடன் அசத்தி வரும் சொர்ணா,இந்தப் படம் வந்தால் தன்னால் எப்படிப்பட்ட கேரக்டரிலும் நடிக்க முடியும் என்று எல்லோருக்கும் தெரிய வரும் என்று படுதெம்பாக கூறுகிறார். இதுதவிர சமீபத்தில் சென்னையில் ஒரு நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினார் சொர்ணா. நம்மை மறந்தாரை நாம் மறவோம்என்ற தலைப்பில் இந்த நாட்டிய நாடகம், மாதவியின் கதையை கருவாகக் கொண்டது. மாதவியாக சொர்ணாவே நடித்தார். இந்த நாடகத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால்,சொர்ணா சந்தோஷமாகியுள்ளார்.எனக்கு சிலப்பதிகாரத்தில் மிகவும் பிடித்த கேரக்டர் மாதவி தான். மாதவி அவ்வளவு அழகு. இதை இளங்கோவடிகளேசிலப்பதிகாரத்தில் அவ்வளவு அற்புதமாக வர்ணித்துள்ளார். சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலைப் படித்தபோது இதை என்னால் உணர முடிந்தது. இதனால் மாதவி மீது எனக்கு காதலேபிறந்து விட்டது. அதனால் தான் நான் அரங்கேற்றிய முதல் நாட்டிய நாடகத்தின் கதாநாயகியாக மாதவியை வைத்தேன். தன்னிடமிருந்து பிரிந்து சென்ற கோவலினிடம் மாதவி பேசிய கடைசி வாசகம் தான் நம்மை மறந்தாரை நாம் மறவோம் என்றவாசகம். அதையே எனது நாடகத்தின் தலைப்பாக வைத்து விட்டேன் என்று கூறி நிறுத்தினார் சொர்ணா. தொடர்ந்து இதுபோல நாடகங்களை நடத்தப் போவதாகவும், மறுபக்கம் சினிமாவிலும் புகுந்து விளையாடப் போவதாகவும்புன்னகையுடன் கூறுகிறார் இந்த புதுமை நாயகி சொர்ணா. இரட்டைக் குதிரை சவாரிதான் என்றாலும் சவாரி சொகுசாகவேஇருக்கும் என்கிறது சொர்ணாவின் அந்த பொருள் பொதிந்த புன்னகை.

Subscribe to Oneindia Tamil
சங்கர மட சங்கடங்கள், ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு படத்தால் ஏற்பட்ட சென்சார் சிக்கல்கள் என சர்ச்சைகளில் தொடர்ந்துசிக்கி வந்த காந்த உடல் அழகி சொர்ணமால்யா இப்போது புத்துணர்ச்சியுடன், புதுத் தெம்புடன் தனது திறமைகளைஒவ்வொன்றாக எடுத்து விடத் தயாராகி வருகிறார்.

சன் டிவியில் இளமை புதுமை என்ற வித்தியாசமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சொர்ணமால்யா பின்னர் சினிமாவில்நுழைந்தார். மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தில் ஷாலினிக்கு அக்கவாக வந்து போனார்.

அதில் கிடைத்த அறிமுகத்தால் அவருக்கு எங்கள் அண்ணா படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தது.இதுதான் அவரது வாழ்க்கையில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்திய படம்.

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், தொடர்ந்து வந்த சங்கர மட விவகாரங்கள் என சிக்கலில் சிக்கித்தவித்தார் சொர்ணா. ஆனால் அவையெல்லாம் பனி போல விலகி ஓடின.

இதையடுத்து முழு வீச்சில் சினிமா வாய்ப்புகளைத் தேடத் தொடங்கிய சொர்ணாவுக்குக் கிடைத்தது ஸாரி எனக்குகல்யாணமாயிடுச்சு. இப்படத்தில் கிளாமரில் விஸ்வரூபம் எடுத்து தனது முழுத் திறமைகளையும் காட்டி அசத்தினார்.

சென்சாரில் சிக்கித் தவித்த சொர்ணாவின் பல கிளாமர் காட்சிகள், கத்திரிக்கோலுக்கு இரையாகி வெட்டித் தள்ளப்பட்டன. மிச்சம்மீதி இருந்த காட்சிகளுடன் சமீபத்தில் படம் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்றது.

இருந்தாலும் கவலைப்படாத சொர்ணா இப்போது படு ஃபிரஷ்ஷாக சில படங்களில் நடித்து வருகிறார். யுகா, அழகு நிலையம்ஆகிய படங்களில் அவருக்கு நல்ல ரோல்கள் என்கிறார் சொர்ணா. அதை விட அவர் அதிகம் எதிர்பார்ப்பது சத்யராஜுடன்நடித்து வரும் சிவலிங்கம் ஐ.பி.எஸ். படத்தைத்தான்.

இதில் அதிரடி காவல்துறை அதிகாரியாக புகுந்து விளையாடியுள்ளாராம். ஆக்ஷன் காட்சிகளுடன் அசத்தி வரும் சொர்ணா,இந்தப் படம் வந்தால் தன்னால் எப்படிப்பட்ட கேரக்டரிலும் நடிக்க முடியும் என்று எல்லோருக்கும் தெரிய வரும் என்று படுதெம்பாக கூறுகிறார்.

இதுதவிர சமீபத்தில் சென்னையில் ஒரு நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினார் சொர்ணா. நம்மை மறந்தாரை நாம் மறவோம்என்ற தலைப்பில் இந்த நாட்டிய நாடகம், மாதவியின் கதையை கருவாகக் கொண்டது.

மாதவியாக சொர்ணாவே நடித்தார். இந்த நாடகத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால்,சொர்ணா சந்தோஷமாகியுள்ளார்.எனக்கு சிலப்பதிகாரத்தில் மிகவும் பிடித்த கேரக்டர் மாதவி தான். மாதவி அவ்வளவு அழகு. இதை இளங்கோவடிகளேசிலப்பதிகாரத்தில் அவ்வளவு அற்புதமாக வர்ணித்துள்ளார்.

சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலைப் படித்தபோது இதை என்னால் உணர முடிந்தது. இதனால் மாதவி மீது எனக்கு காதலேபிறந்து விட்டது. அதனால் தான் நான் அரங்கேற்றிய முதல் நாட்டிய நாடகத்தின் கதாநாயகியாக மாதவியை வைத்தேன்.

தன்னிடமிருந்து பிரிந்து சென்ற கோவலினிடம் மாதவி பேசிய கடைசி வாசகம் தான் நம்மை மறந்தாரை நாம் மறவோம் என்றவாசகம். அதையே எனது நாடகத்தின் தலைப்பாக வைத்து விட்டேன் என்று கூறி நிறுத்தினார் சொர்ணா.

தொடர்ந்து இதுபோல நாடகங்களை நடத்தப் போவதாகவும், மறுபக்கம் சினிமாவிலும் புகுந்து விளையாடப் போவதாகவும்புன்னகையுடன் கூறுகிறார் இந்த புதுமை நாயகி சொர்ணா. இரட்டைக் குதிரை சவாரிதான் என்றாலும் சவாரி சொகுசாகவேஇருக்கும் என்கிறது சொர்ணாவின் அந்த பொருள் பொதிந்த புன்னகை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil