காதல் கணவர் போட்டோக்களை இன்ஸ்டாவில் இருந்து திடீரென்று நீக்கிய பிரபல ஹீரோயின்.. என்னங்க ஆச்சு?

By

சென்னை: நடிகை ஸ்வாதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து தனது கணவரின் புகைப்படங்களை நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

Celebrity Quarantine pets | Dhruv | Priya Atlee |Yashika

சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழில், ஹீரோயினாக அறிமுகமானவர், தெலுங்கு நடிகை ஸ்வாதி.

தெலுங்கில் 'கலர்ஸ்' என்ற டிவி நிகழ்ச்சியை நடத்தி வந்த இவர் பின்னர் நடிகையானார். அவருக்கு சுப்ரமணிபுரம் படம் தமிழில் நல்ல அடையாளத்தை கொடுத்தது.

கண்ணிகளிரண்டால்

கண்ணிகளிரண்டால்

இந்தப் படத்தில் இடம்பெற்ற கண்ணிகளிரண்டால் பாடல், அவரை கிராமங்களுக்கும் கொண்டு சென்றது. இதில், சசிகுமார், ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து ஜெய் நடித்த கனிமொழி படத்தில் நடித்தார். இந்தப் படம் கவனிக்கப்படவில்லை. இதையடுத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த போராளி படத்தில் நடித்தார்.

விமானியுடன் காதல்

விமானியுடன் காதல்

பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை, தெறி உட்பட சில படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த விமானியான, விகாஸ் என்பவருக்கும், ஸ்வாதிக்கும் காதல் ஏற்பட்டது. காதலித்து வந்தனர். பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

நடிக்கவில்லை

நடிக்கவில்லை

இவர்கள் திருணமத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதில் திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்குப் பிறகு திருச்சூர் பூரம் என்ற ஒரே ஒரு மலையாளப் படத்தில் மட்டும் நடித்தார் ஸ்வாதி. பிறகு நடிக்கவில்லை.

திடீரென நீக்கம்

திடீரென நீக்கம்

தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தனது கணவருடன் இருக்கும் போட்டோக்களை அடிக்கடி பதிவிட்டு வருவார் ஸ்வாதி. இந்நிலையில் திடீரென, அவரது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து தனது கணவருடன் இருக்கும் போட்டோக்களை நீக்கியுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஏன் இப்படி திடீரென கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருவருக்கும் பிரச்னை

இருவருக்கும் பிரச்னை

இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்வாதி. அதில் ஆர்சீவ்ஸில் அவரது கணவர் படங்கள் இருக்கின்றன. தேவைப்படும்போது அவை முன்னே வரும் என்பது போல அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் ஏதோ பிரச்னை என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: swathi ஸ்வாதி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X