»   »  இயக்குனர்கள் மீது பாயும் ஸ்வாதிகா

இயக்குனர்கள் மீது பாயும் ஸ்வாதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் நடிக்கும் படங்களில் எனக்குப் போதிய விளம்பரம் கொடுப்பதில்லை. தங்கர்பச்சான் கூட என்னைஓரங்கட்டியது அதிர்ச்சி அளிக்கிறது என்கிறார் ஸ்வாதியாக இருந்து பின்னர் ஸ்வாதிகாவான நடிகை.

அஜீத், விஜய்யுடன் சில படங்களில் ஜோடி சேர்ந்தவர் ஸ்வாதி. அஜீத்துடன் மிக நெருக்கமாக இருந்தார். இதனால்இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூட ஒரு காலத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

பின்னர் மும்பைப் புயல்களின் வரவால் வாய்ப்பிழந்தார். வீட்டில் சும்மா இருந்த அவருக்கு நியூமராலஜி ஆசாமிகள்தந்த யோசனை காரணமாக, தனது பெயரை ஸ்வாதிகா என்று நீட்டித்துக் கொணடார். பெயர் மாற்றம் ஓரிருவாய்ப்புகளைத் தந்தாலும் எதுவும் பிரேக் தரவில்லை.

இந் நிலையில் தங்கர்பச்சானின் தென்றல் படத்தில் இரண்டாவது ஹீரோயின் அந்தஸ்தில் வாய்ப்பு கிடைத்தது.நன்றாகத்தான் நடித்திருந்தார் ஸ்வாதிகா. ஆனாலும் நாயகி உமாவுக்குக் கிடைத்த அளவுக்கு இவருக்கு ஊக்கம்தரப்படவில்லை.

இங்குதான் தங்கர்பச்சானை குற்றம் சாட்டுகிறார் ஸ்வாதிகா. தென்றல் படத்தில் நான் நன்றாக நடித்திருந்தாலும்,அதிகம் பேசப்படமல் போனதற்கு எனக்கு போதிய அளவுக்கு தங்கர்பச்சான் விளம்பரம் தராததே காரணம்என்கிறார்.

மேலும் என்னிடம் சொன்னபடி எனது கேரக்டரை தங்கர்பச்சான் அமைக்கவில்லை. என்னை ஏமாற்றிவிட்டார்.உமாவுக்கு முக்கியத்துவம் தந்து என்னை தங்கர்பச்சான் ஏமாற்றியது பெரும் அதிர்ச்சி தந்துவிட்டது என்கிறார்.

அதுமட்டுமல்ல, சமீபத்தில் வந்த காதலே ஜெயம் பட விளம்பரத்திலும் கூட என்னை இருட்டடிப்புசெய்துவிட்டார்கள். அந்தப் படத்தில் எனக்கு நல்ல வேடம் என்றார்கள், பாட்டுக்கள் உள்ளன என்றார் இயக்குனர்நடராஜன். ஆனால் துக்கடா கேரக்டர் கொடுத்து ஏமாற்றிவிட்டார்.

புதிதாக வந்த ப்ரீத்தி வர்மாவை தலையில் தூக்கி ஆடிவிட்டு என்னை ஒதுக்கிவிட்டார்கள். இவர்கள் என்னநினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்மிடம் கோபமாகக் கேட்டார் ஸ்வாதிகா.

பெண் பாவம் பொல்லாததுப்பா, டைரக்டர்களா !

இவரைப் போன்றவர்கள் எல்லாம் சின்னத் திரையில் சான்ஸ் வேட்டை நடத்திக் கொண்டிருக்க,சினிமாவில் தான் தொடர்ந்து நடிப்பேன் என்று பிடிவாதமாய் இருக்கிறார் ஸ்வாதிகா.

கோபமும் ஆத்திரமுமாக கோடம்பாக்கத்தைச் சுற்றி வரும் ஸ்வாதிகாவுக்கு ஒரு சின்ன மகிழ்ச்சிஅவரது தாயார் திடீரென நடிகையானது தான். அந்நியன் படத்தில் இவரது தாயாருக்கு அம்மாரோல் ஒன்று தந்திருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர்.

தனது தாயாருடன் அந்தப் படத்தின் துவக்க விழாவுக்கு ஸ்வாதிகா போக, அப்போது அம்மாவைப்பார்த்த ஷங்கர், படத்தில் அம்மா கேரக்டர் ஒன்னு இருக்கு. அதில் உங்கம்மா நடிக்கட்டுமே என்றுசொல்லி அட்வான்ஸ் தந்தாராம். இப்போது அதில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்வாதிகாவின்அம்மா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil