''நான் மட்டுமா?'': நடிகை ஸ்வேதா பாசு வாக்குமூலத்தால் பயத்தில் ஹீரோயின்கள்
ஹைதராபாத்: விபச்சாரத்தில் பல ஹீரோயின்கள் இருக்கிறார்கள் என்று நடிகை ஸ்வேதா பாசு கூறியதை அடுத்து பல நடிகைகள் கலங்கிப் போயுள்ளார்களாம்.
தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வரும் ஸ்வேதா பாசு ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது கையும், களவுமாக போலீசில் சிக்கினார்.
அவருடன் சில தொழில் அதிபர்களும் சிக்கினார்கள்.

மறுவாழ்வு மையம்
ஸ்வேதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பெண்கள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

ஸ்வேதா
நான் மட்டும் இல்லை பல பிரபல ஹீரோயின்கள் விபச்சார தொழிலில் உள்ளனர் என்று ஸ்வேதா போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.

ஹீரோயின்கள்
ஸ்வேதா போலீசாரிடம் பல ஹீரோயின்கள் என்று மட்டும் தான் கூறினாரா, இல்லை பெயர்களையும் கூறினாரா என்ற கலக்கத்தில் ஹீரோயின்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹோட்டல்கள்
ஸ்வேதா பாசு கூறியது குறித்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்களாம். மேலும் புதுமுக நடிகைகளுக்கு வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் தரகர்கள் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











