Don't Miss!
- News அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. "அதிமுக ஆட்சி தான் காரணம்".. சொல்வது அமைச்சர்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நடிகை ஸ்வேதா மேனன் திருமணம்: காதலரை மணந்தார்!
பிரபல திரைப்பட நடிகை ஸ்வேதா மேனன்- ஸ்ரீவத்சன் மேனன் காதல் திருமணம், திருச்சூர் வளாஞ்சேரியில் இன்று (சனிக்கிழமை) நடந்தது. திரையுலகப் பிரமுகர்கள், நண்பர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சுவேதா மேனன். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வளாஞ்சேரி ஆகும். இவர் நடித்த ரதி நிர்வேதம் என்ற புதிய மலையாள திரைப்படம் கேரளாவில் சக்கைப் போடு போடுகிறது.
தற்போது மும்பையில் வசித்து வரும் இவருக்கும், மும்பையில், ஒரு வார இதழில் பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிவரும் ஸ்ரீவத்சன் மேனனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
அதன்படி, இன்று, வளாஞ்சேரி வடக்கும்புறத்தில் உள்ள இந்திரா சதன் என்ற வீட்டில் திருமண நிகழ்ச்சிகள் நடக்கின்றன. காலை 11 மணிக்கு ஸ்ரீவத்சன் மேனன், நடிகை ஸ்வேதா கழுத்தில் தாலி கட்டினார்.
மணமகன் ஸ்ரீவத்சனும், நடிகை சுவேதா மேனனும், பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் திருமணம் பற்றி சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த ஸ்வேதா, யாருடன் திருமணம் என்பதை இரண்டு ஆண்டு கழித்துதான் முடிவு செய்வேன் என்று கூறி வந்ததார். இந்த நிலையில், இப்போதமணம் செய்து கொண்டார்.