காமக் கொடூரன்கள் இதைப் பார்த்தாவது திருந்தட்டும்... ஸ்வேதா மேனனின் பரபரப்பு 'மெசேஜ்'!

By Sudha

சென்னை: சமீபத்தில் 73 வயது காங்கிரஸ் எம்.பி. தன்னை பாலியல் ரீதியாக சீண்டினார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்வேதா மேனனின் தத்ரூப பிரசவக் காட்சி இடம் பெற்ற களிமண்ணு படம் தமிழில் உயிரின் ஓசை என்ற பெயரில் டப்பிங் ஆகி வருகிறது.

காமக் கொடூரன்கள் இந்த பிரசவக் காட்சியைப் பார்த்தாவது திருந்தட்டும் என்று அந்தக் காட்சி நிஜமாக படமாக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்புகளுக்குப் பதிலளித்திருந்தார் ஸ்வேதா என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடும் நடிகை வேடத்தில் ஸ்வேதா மேனன் கவர்ச்சி பொங்க நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

பிரதாப் சந்திரன் மகன் அனுப் பிரசாத்

பிரதாப் சந்திரன் மகன் அனுப் பிரசாத்

மலையாளம், தமிழ் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் பிரதாப் சந்திரன். அவரது மகன் அனூப் பிரசாத். தனது தந்தையை கௌரவிக்கும் பொருட்டு பிரதாப் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி "உயிரின் ஓசை" என்ற படத்தை தயாரிக்கிறார்.

மலையாளத்து களிமண்ணு

மலையாளத்து களிமண்ணு

மலையாளத்தில் களிமண்ணு என்ற பெயரில் தயாரான படமே "உயிரின் ஓசை" என்ற பெயரில் உருவாகிறது.

ஸ்வேதா மேனன் நாயகி

ஸ்வேதா மேனன் நாயகி

இப்படத்தில் ஸ்வேதா மேனன் நாயகியாக நடித்துள்ளார். கூடவே பிஜூ மேனன், சுஹாசினி, லஷ்மி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் பிரியதர்சன் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார். சுனில்ரெட்டி, அனுபம்கேர் ஆகியோரும் நடிதிருக்கிறார்கள்.

குத்துப்பாட்டுக்கு ஆடும் நாயகி

குத்துப்பாட்டுக்கு ஆடும் நாயகி

ஒரு பாடலுக்கு ஆடும் நடிகையாக இருக்கும் ஸ்வேதா மேனன் பல போராட்டத்திற்கு பிறகு ஒரு படத்தில் கதாநாயகி ஆகிறார். அந்த படத்தின் சிறப்பு காட்சியை காண வரும் அவரது கணவர் விபத்தில் சிக்கி மூளைச் சாவு நிலமைக்கு ஆளாகிறார்.

வாரிசு இல்லையே.. கலங்கிய ஸ்வேதா

வாரிசு இல்லையே.. கலங்கிய ஸ்வேதா

இனி பிஜூமேனன் உயிர் பிழைக்க முடியாது என்கிற நிலைமையில் உடல் உறுப்புகளை தானமாக கொடு என்று நடபு வட்டாரங்கள் கேட்கிறார்கள். எனக்குன்னு ஒரு வாரிசு கூட இல்லையே என்று அவர் கலங்குவதை கண்டு பிஜூ மேனனின் உடலிலிருந்து உயிரணுவை எடுத்து ஸ்வேதா மேனனின் கருவறைக்குள் வைத்து அவளைத் தாயாக்குகிறார்கள். அந்த பிரசவத்தை முழுவதுமாக படமாக்கி மக்களுக்கு காட்டுங்கள் என்கிறார்.

தத்ரூப பிரசவக் காட்சி

தத்ரூப பிரசவக் காட்சி

ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவத்தை இதற்காக படமாக்கினார்கள். அதற்காக பலத்த எதிர்ப்பும் கிளம்பியது.

காமக் கொடூரன்கள் திருந்தட்டுமே

காமக் கொடூரன்கள் திருந்தட்டுமே

ஒரு பெண் தாயாவது எவ்வளவு வேதனையானது என்பதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காம கொடூரன்கள் இதை பார்த்தாவது திருந்த வேண்டும் என்று கூறி ஸ்வேதாமேனன் அந்த எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பரபரப்பை ஏற்படுத்திய காட்சி

பரபரப்பை ஏற்படுத்திய காட்சி

ஸ்வேதாவின் இந்த தத்ரூப பிரசவக் காட்சி படமாக்கப்பட்டபோது அது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை பிளஸ்ஸி இயக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X