மும்பையில் மேலும் ஒரு வீடு வாங்கிய டாப்ஸி: எத்தனை கோடி தெரியுமா?

By Siva

Recommended Video

Actress Kajal Agarwal: ஏகப்பட்ட லைக்ஸ் வாங்கிய மேக்கப் இல்லாத புகைப்படம்

மும்பை: டாப்ஸி மும்பையில் ரூ. 6 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த டாப்ஸி பாலிவுட் பக்கம் சென்றார். தனது உடல் எடையை வெகுவாக குறைத்து கடினமாக உழைத்து பாலிவுட்டில் தனக்கென்று ஒரு பெயர் எடுத்துள்ளார்.

Taapsee buys yet another apartment in Mumbai

நடிக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரமாக இருந்தால் கூப்பிடுங்க டாப்ஸியை என்று சொல்லும் அளவுக்கு பாலிவுட்டில் வளர்ச்சி அடைந்துள்ளார். மேலும் படப்பிடிப்பு தளங்களில் அடம் பிடிப்பது இல்லை, பிரச்சனை செய்வது இல்லை, சமத்தாக உள்ளார். அதனால் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் விரும்பும் நடிகையாக உள்ளார் அவர்.

டாப்ஸி கடந்த 2017ம் ஆண்டு மும்பையில் சொகுசு அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கினார். அந்த அபார்ட்மென்டில் அவர் தனது தங்கை ஷகுனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் குடியிருக்கும் அடிக்குமாடி குடியிருப்பில் மேலும் ஒரு அபார்ட்மென்ட் விற்பனைக்கு வருவதை அறிந்தார்.

இதையடுத்து அவர் அந்த அபார்ட்மென்ட்டை ரூ. 6 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். 3 படுக்கை அறைகள் கொண்ட அந்த வீட்டை அலங்கரிக்கும் பொறுப்பை தங்கச்சியிடம் விட்டுள்ளார் டாப்ஸி. 30 வயதாகும் முன்பு சொந்த வீடு, கார், நிலையான கெரியர், கடன் இல்லா வாழ்க்கை வேண்டும் என்று விரும்பினார் டாப்ஸி.

தற்போது ஒன்றுக்கு இரண்டு வீடுகள் வாங்கியுள்ளார், சொகுசு கார் வைத்துள்ளார், கடன் இல்லை, பட வாய்ப்புகளும், விளம்பர பட வாய்ப்புகளும் வந்து குவிகின்றன. இந்நிலையில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்ஸி நடித்துள்ள கேம் ஓவர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கேம் ஓவர் படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை சசிகாந்த் தயாரித்துள்ளார். தமிழ் ட்ரெய்லரை தனுஷும், தெலுங்கு ட்ரெய்லரை ராணாவும் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேம் ஓவர் குறித்து டாப்ஸி கூறியதாவது,

கேம் ஓவர் படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் ஸ்வப்னா. அந்த கதாபாத்திரம் சவாலானதாக இருந்தது. அதனால் தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார். கேம் ஓவர் படம் வரும் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X