ஏற்கனவே அவங்கள காப்பியடிக்கிறீங்கன்னு பேச்சு.. இப்போ இவங்களையா.. நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை: நடிகை டாப்ஸி நடத்தியிருக்கும் போட்டோ ஷுட்டை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Recommended Video

தமிழ் இயக்குநர் எழுதிய தடகள வீராங்கனை பற்றிய உண்மை கதையில் டாப்ஸி-வீடியோ

தெலுங்கு படத்தின் மூலம் நடிப்புக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இவர் தமிழில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த டாப்ஸி, பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

காப்பியடிக்கும் டாப்ஸி

தொடர்ந்து பாலிவுட் படங்களில் பிஸியான நடிகையாக உள்ளார் டாப்ஸி. இவருக்கும் பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்துக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. உடை, ஹேர் ஸ்டைல் என எல்லாவற்றிலும் டாப்ஸி, நடிகை கங்கனா ரனாவத்தை காப்பியடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இருவரும் ஒருவர் மீது ஒருவர் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.

உடை ஹேர் ஸ்டைல்

உடை ஹேர் ஸ்டைல்

கங்கனா ரனாவத்தின் சகோதரி, பகீரங்கமாகவே டாப்ஸியின் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். கங்கனாவை போன்று ஹேர் ஸ்டைல் , உடை என மாற்றி டாப்ஸி நடத்திய போட்டோ ஷுட்டுக்களும் வைரலாயின. கங்கனா ரனாவத்துக்கு கிடைத்த சில பட வாய்ப்புகளை, சம்பளத்தை குறைத்து டாப்ஸி தட்டிப் பறித்ததால் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்ததாக கூறப்பட்டது.

மோசமான போட்டோ ஷுட்

மோசமான போட்டோ ஷுட்

இந்நிலையில் நடிகை டாப்ஸி தற்போது நடத்தியிருக்கும் போட்டோ ஷுட் படு கிளாமராக உள்ளது. குறிப்பாக பிரியங்கா சோப்ராவை போன்று உடை உடுத்தி போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார் டாப்ஸி. வயிறு வரை ஓபன் உள்ள கறுப்பு நிற கவுனை அணிந்திருக்கிறார் டாப்ஸி. உள்ளாடை அணியாமல் படு மோசமாக முன்னழகு தெரியும் வகையில் போஸ் கொடுத்திருக்கிறார் டாப்ஸி.

இப்போ பிரியங்காவா?

இப்போ பிரியங்காவா?

இவரது இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. டாப்ஸியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஏற்கனவே கங்கனாவை காப்பியடித்தீர்கள், இப்போது பிரியங்கா சோப்ராவை காப்பியடிக்கிறீர்களா என கேட்டு வருகின்றனர். அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, மொத்தமும் தெரியும் வகையில் வெள்ளை நிற கவுனை அணிந்து கிறங்கடித்தார்.

கடுமையான கருத்துகள்

கடுமையான கருத்துகள்

அதே பாணியில் இப்படி ஒரு மோசமான போட்டோ ஷுட்டை நடத்தியிருக்கிறார் டாப்ஸி. அவரது இந்த உடையை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு மேலாடை அணியாமலே இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் பட வாய்ப்புக்காக இப்படியெல்லாம் காட்ட சொல்கிறது என்றும் தங்களின் கடுமையான கருத்துக்களை கமென்ட்டுகளாக பதிவு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X