கிண்டல் செய்த நெட்டிசனுக்கு நெத்தியடி கொடுத்த டாப்ஸி

By Siva

மும்பை: தனக்கு நடிக்கத் தெரியாது என்று கிண்டல் செய்த நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் டாப்ஸி.

பாலிவுட்டில் கிட்டத்தட்ட செட்டிலாகிவிட்ட டாப்ஸி நடிப்பால் எப்படி மிரட்டுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான கேம் ஓவர் படத்தை பார்த்துவிட்டு அவரை பாராட்டாதவர்களே இல்லை.

Taapsee handles a troll like a boss

இந்நிலையில் அனுபவ் சின்ஹா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் டாப்ஸி. இதையடுத்து அவர் அனுபவ் சின்ஹாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு நல்ல உணவுடன் புதிய ஆரம்பம் துவங்கியுள்ளது. இது போன்ற கதையில் நடிக்க பல ஆண்டுகளாக காத்திருந்தேன் என்று தெரிவித்திருந்தார்.

டாப்ஸியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் இதுவும் வித்தியாசமான கதாபாத்திரம் கொண்ட கதையா, என்ன கதாபாத்திரம் என்று சொல்லுங்களேன் என்று கேட்டதுடன் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தனர். இந்நிலையில் நெட்டிசன் ஒருவரோ, அனுபவ் சின்ஹா சார், நீங்கள் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். டாப்ஸிக்கு நடிக்கத் தெரியாது என்று கமெண்ட் போட்டார்.

நெட்டிசனின் கமெண்ட்டை பார்த்த டாப்ஸி அவருக்கு நக்கலாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது,

சாரி, தற்போது அனைத்தும் கையெழுத்தாகிவிட்டது. அதனால் சாரால் என்னை படத்தை விட்டு நீக்க முடியாது. ஆனால் ஒரு வேலை செய்யுங்கள், அடுத்த முறை முயற்சி செய்யவும் இருப்பினும் அதிலும் நானே ஜெயிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள் யாராவது கலாய்த்தால் கடுப்பாகாமல் பதிலுக்கு அவர்களை கிண்டல் செய்வார் டாப்ஸி. கிண்டல் செய்பவர்களுக்கு கூலாக பதில் அளிப்பது டாப்ஸியின் ஸ்டைல். டாப்ஸி கங்கனா ரனாவத்தின் ஸ்டைலை காப்பியடித்து நடிப்பதாக அவரின் அக்கா ரங்கோலி குற்றம் சாட்டினார். அதை பார்த்த இயக்குநர் அனுராக் கஷ்யப் டாப்ஸிக்கு ஆதரவாக பேசினார்.

ரங்கோலி கூறியது குறித்து டாப்ஸியிடம் கேட்டதற்கு, எனக்கு அதற்கெல்லாம் பதில் சொல்ல நேரம் இல்லை என்று தெரிவித்தார். ரங்கோலி தற்போது பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனை விளாசியுள்ளார். ரங்கோலி தொடர்ந்து ட்விட்டரில் யாரையாவது விளாசுவதை பார்த்து பாலிவுட்காரர்கள் கடுப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X