கைவசம் வேறு தொழில் வைத்திருக்கும் டாப்ஸி: அது என்ன தொழில் தெரியுமா?

By Siva

மும்பை: நடிகை டாப்ஸி கை வசம் வேறு ஒரு தொழில் வைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த டாப்ஸி பாலிவுட்டில் போராடி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக டாப்ஸியை தேடி வருகிறது.

அவரும் அத்தகைய படங்களில் அபார நடிப்பால் அசத்திக் கொண்டிருக்கிறார்.

பயம்

பயம்

தனி மனுஷியாக எனக்கு தோல்வியை கண்டு பயம் இல்லை. அதை நீங்கள் திரையில் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தோல்வி ஏற்பட்டால் அத்துடன் வாழ்க்கையே முடிந்துவிடுமா என்ன? நான் மீண்டும் முயற்சி செய்வேன். என் படங்கள் தோல்வி அடைந்தால் நான் வேறு ஏதாவது செய்வேன். அத்துடன் என் வாழ்க்கை முடிந்துவிடாது என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் டாப்ஸி.

தைரியம்

தைரியம்

படங்களோடு என் வாழ்க்கை முடிந்துவிடுவது இல்லை. அந்த தைரியமும், நம்பிக்கையும் நான் நான் நல்ல படங்களை தேர்வு செய்ய உதவுகின்றது என்று நினைக்கிறேன். என் தங்கை ஷகுனுடன் சேர்ந்து உணவகம் துவங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். நேரம் கிடைத்த உடன் அந்த திட்டத்தை செயல்படுத்துவேன். சினிமா துறைக்கு சம்பந்தமில்லாத பிற விஷயங்களையும் செய்ய விரும்புகிறேன் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

தொழில்

தொழில்

எதிர்காலத்தில் நான் சினிமாவை விட்டு விலகுவது என்றால் அதனுடன் தொடர்பில்லாத பிற தொழில் என் கைவசம் இருக்க வேண்டும். சினிமாவை தாண்டி வாழ்க்கை இருப்பது நல்லது என்று தெளிவாக பேசுகிறார் டாப்ஸி. அவர் ஏற்கனவே தனது தங்கையுடன் சேர்ந்து திருமண வேலைகள் அனைத்தையும் செய்து கொடுக்கும் வெட்டிங் பிளானர் தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டாப்ஸி மட்டும் அல்ல பல நடிகைகளும் சைட் பிசினஸ் செய்து வருகிறார்கள்.

பழக்கம்

பழக்கம்

நான் யாருடனும் அவ்வளவாக பழகுவது இல்லை. அதனால் திரையுலகினர் மாறிவிட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால் தற்போது எல்லாம் சிறப்பான ஸ்க்ரிப்டுகள் என்னைத் தேடி வருகின்றது. வெற்றி அடைந்த பிறகு மக்கள் என்னை மரியாதையுடன் நடத்துகிறார்கள். என் கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். என் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கத் துவங்கிவிட்டது என்று டாப்ஸி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X