Tapsee Marriage -டாப்சிக்கு எப்போ திருமணம் தெரியுமா?.. ஃபாரின் ப்ளேயர்தான் மாப்பிள்ளையாம்.. குவியும் வாழ்த்து

சென்னை: டாப்சி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளத்துக்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த அவர் ஹிந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது நடிப்பில் கடைசியாக டன்கி திரைப்படம் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்தச் சூழலில் அவரது திருமணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் கரியரில் முக்கியமான படமாக அமைந்தது ஆடுகளம். அந்தப் படம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. ஆடுகளம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக தனது நடிப்பை சிறப்பான முறையிலேயே வெளிப்படுத்தினார். அதனால் முதல் படத்திலேயே கோலிவுட்டின் கவனம் பெற்ற டாப்சிக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

Taapsee is getting married to badminton player Mathiyas Boe

தமிழில் டாப்சி: ஆடுகளம் படத்துக்கு பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றாலும் யார் கண் பட்டதோ தெரியவில்லை டாப்சிக்கு பட வாய்ப்புகள் தமிழில் பெரிதாக எதுவும் அமையவில்லை. இருப்பினும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

பாலிவுட்டில் டாப்சி: சூழல் இப்படி இருக்க ஹிந்தி பக்கம் ஒதுங்கினார் டாப்சி. பேபி என்ற படத்தின் ஹிந்தியில் அறிமுகமான அவருக்கு பிங்க் படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படம்தான் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வையாக ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. பிங்க் படத்துக்கு பிறகு ரன்னிங் ஷாதி, ஜுட்வா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பயோபிக்கில் டாப்சி: அவரது ஹிந்தி கரியரில் பிங்க் படத்துக்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்தது சபாஷ் மிது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. படத்தில் மிதாலி ராஜாக டாப்சி நடித்து பலரிடமும் அப்ளாஸை அள்ளினார். அவர் கடைசியாக டன்கி படத்தில் நடித்திருந்தார். ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனையடுத்து மீண்டும் டாப்சிக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

திருமணம்: இந்நிலையில் டாப்சியின் திருமணம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் தனது நீண்டகால நண்பரும், முன்னாள் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போ என்பவரை காதலித்துவந்ததாகவும் அவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறப்படுகிறது.

எங்கு திருமணம்: இவர்களது திருமணம் உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறதாம். டாப்சி சீக்கியர்; மத்யாஸ் போ கிறிஸ்தவர். எனவே இவர்களது திருமணம் சீக்கிய முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் நடக்கவிருக்கிறது. திருமணத்துக்கான வேலைகள் மும்முரமாக தொடங்கப்பட்டிருக்கின்றன. இரண்டு பேரும் முதன்முதலாக 2013ஆம் ஆண்டு சந்தித்தனர் என்றும் அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. மத்யாஸ் போ டென்மார்க்கை பூர்வீகமாக கொண்டவர் என்பதும்; இப்போது பேட்மிண்டனிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X