உடம்பை பற்றி பேசிய நெட்டிசன்: ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்திய டாப்ஸி
மும்பை: தன் உடல் பாகங்கள் பிடித்திருக்கிறது என்று கூறிய நெட்டிசனுக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் டாப்ஸி.
பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட்டார் டாப்ஸி. வெயிட்டான கதாபாத்திரங்களாக அவரை தேடி வருகிறது. இதனால் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
ட்விட்டரில் தன்னை அசிங்கப்படுத்துபவர்களுக்கு கூட பொறுமையாக பதில் அளிக்கும் அவரின் குணம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.
டாப்ஸி
டாப்ஸி உங்களின் உடல் உறுப்புகள் எனக்கு பிடிக்கும் என்று நெட்டிசன் ஒருவர் தெரிவித்தார். அதற்கு டாப்ஸியோ, வாவ் எனக்கும் பிடிக்கும். உங்களுக்கு பிடித்தது எது? எனக்கு மூளையில் உள்ள செரிபரம் என்று பதில் அளித்துள்ளார்.
ரசிகர்கள்
ட்விட்டர் கணக்கில் தனது ப்ரொபைல் புகைப்படத்தை வைக்கக் கூட துணிச்சல் இல்லாத நபர் தனது கடின உழைப்பால் முன்னேறிய டாப்ஸியை கலாய்த்துள்ளார். டாப்ஸியின் பதிலுக்காக அவரை பாராட்டுகிறேன் என்று ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.
பதில்
மூளை இல்லாதவரிடம் போய் மூளையை பற்றி பேசுகிறீர்களே டாப்ஸி என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
துணிச்சல்
அந்த நெட்டிசன் உடல் பாகங்கள் என்று எதை சொல்கிறார் என்று தெரிந்தும் டாப்ஸி அவரை திட்டாமல் அசிங்கப்படுத்திய விதம் அனைவருக்கும் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











