இந்த டாப்ஸிக்கு பகுமானத்தை பாரேன்: கோலிவுட்டில் பரபர
Recommended Video

மும்பை: டாப்ஸி தமிழ் படங்களில் நடிக்க மறுக்கிறாராம்.
தனுஷின் ஆடுகளம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் டாப்ஸி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது பாலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவர்.
அவர் கைவசம் 4 இந்தி படங்கள் உள்ளன.

டாப்ஸி
தமிழ், தெலுங்கு படங்களை போன்று அல்லாமல் இந்தியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் டாப்ஸி. இந்த இடம் அவருக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை.

முக்கியத்துவம்
பாலிவுட்டில் பெரிய ஹீரோக்களுடன் நடித்தாலும் அவர்களுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் டாப்ஸி. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்றால் இயக்குனர்கள் உடனே டாப்ஸியை அழைக்கிறார்கள்.

விருப்பம்
பாலிவுட்டில் கிட்டத்தட்ட செட்டிலாகிவிட்ட டாப்ஸி தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது இல்லையாம். தன்னை மரத்தை சுத்தி சுத்தி ஆடவிட்டு டூயட் பாடியதோடு விட்டுவிடுவார்கள் என்பதால் அவர் தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க விரும்பவில்லையாம்.

தமிழ்
தமிழ் இயக்குனர் ஒருவர் டாப்ஸியை சந்தித்து கதை சொல்ல சென்றுள்ளார். ஆனால் அவரோ கதை கேட்கவே முடியாது என்று கூறிவிட்டாராம். பாலிவுட்டில் கஷ்டப்பட்டு பிடித்த இடத்தை அவர் இழக்க விரும்பவில்லையாம்.

அவசரம்
எந்த உட்டிலும் நடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அது தானாக நடந்தது. ஹாலிவுட்டுக்கு போகும் நினைப்பு இல்லை என்று டாப்ஸி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











