அதுலயும் 'அந்த' சடங்கு இருக்கே... அலுத்துக் கொள்ளும் டாப்ஸி!

By Sudha

சென்னை: டாப்ஸிக்கு திருமணம் என்றாலே போர் அடிக்கிறதாம். அதிலும் முதலிரவு என்ற பெயரில் நடத்துவதை நினைத்தாலே ரொம்பவே போர் அடி்ப்பதாக அலுத்துக் கொண்டுள்ளார் டாப்ஸி.

டாப்ஸி என்றதும் நினைவுக்கு வருவது வெள்ளாவி வச்சு வெளுத்தவங்கதேன்.. அப்படி தமிழ்நாட்டு மக்காக்களின் மனசோடு புதைந்து போனவர் டாப்ஸி.. ஆனால் அதன் பிறகு ஆளைத்தான் காணோம்.

டாப்ஸிக்கு இப்போது தமிழில் நோ படம். இருந்தாலும் முயற்சிகளை தொடர்ந்தபடிதான் உள்ளாராம்.

லூதியானா பொண்ணு, டாப்ஸி பன்னு

லூதியானா பொண்ணு, டாப்ஸி பன்னு

டாப்ஸி பன்னு என்ற இயற்பெயர் கொண்டவரான டாப்ஸிக்கு சொந்த ஊர் லூதியானாவாம். பஞ்சாபி கோதுமையான டாப்ஸிக்கு இப்போது தமிழில் பெரிய அளவில் படங்கள் இல்லை. அதற்காக அவர் வருத்தப்படவும் இல்லையாம்.

மகத் -மனோஜ் அடிதடிக்குப் பிறகு

மகத் -மனோஜ் அடிதடிக்குப் பிறகு

டாப்ஸிக்காக சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடிகர்கள் மகத்தும், மனோஜும் அடித்துக்கொண்டனர். அதன் பிறகுதான் டாப்ஸிக்கு தமிழில் படங்களே இல்லாத நிலை ஏற்பட்டு விட்டதாம்.

இருந்தாலும் 2 படம்

இருந்தாலும் 2 படம்

இருந்தாலும் தற்போது டாப்ஸி கையில் 2 படங்கள் தமிழில் இருக்கிறதாம். அதேபோல தெலுங்கிலும் 2 படங்கள் இருக்கிறாம்.

மதகஜ ராஜாவிலிருந்து விலகல்

மதகஜ ராஜாவிலிருந்து விலகல்

விஷால் ஹீரோவாக நடிக்கும் மதகஜராஜாவில் முதலில் நடிப்பதாக இருந்தார் டாப்ஸி. ஆனால் கடைசி நேரத்தில் கழன்று கொண்டு விட்டார். அதன் பிறகுதான் வரலட்சுமியைப் புக் செய்தார்களாம். வரலட்சுமிக்காகத்தான் டாப்ஸியை கழற்றி விட்டனர் என்றும் ஒரு அரசல்புரசல் செய்தியும் உண்டு.

சர்ச்சைப் பேச்சு

சர்ச்சைப் பேச்சு

அது கிடக்கட்டும்.. டாப்ஸி இப்போது ஒரு பேட்டியின்போது திருமணம் குறித்த கருத்தைத் தெரிவித்துள்ளார். அது லேசாக சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

முதலிரவு வேஸ்ட் - போர்

முதலிரவு வேஸ்ட் - போர்

திருமணம் குறித்து அவர் பேசுகையில், திருமணமே ஒரு போர்தான். அதிலும் முதலிரவு என்ற பெயரில் நடத்தப்படும் சடங்குகள் இருக்கிறதே இவையெல்லாம் ரொம்பவே போர் என்று கூறியுள்ளார் டாப்ஸி.

என்ன பஞ்சாயத்து எந்த ஊரிலிருந்து கிளம்பப் போகிறதோ...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X