ஆட்டோவுல போனாலும் நிம்மதியா விடமாட்டீங்களா?.. கையெடுத்துக் கும்பிட்ட ஆடுகளம் ஹீரோயின்!

மும்பை: தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. கடந்த மார்ச் மாதம் ரகசியமாகத்தான் திருமணத்தை நடத்தி முடித்த டாப்ஸி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஆட்டோவில் தனது தோழியுடன் டாப்ஸி சென்று கொண்டிருக்கும் நிலையில், சில புகைப்படக் கலைஞர்கள் அவரைப் பின்தொடர்ந்து போட்டோக்கள் எடுத்து நிலையில் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார் டாப்ஸி.

கடந்த 2010-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஜும்மாடி நாதம்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி. 2011-ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

Taapsee Pannu gets tensed after paps follow during her auto ride

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வந்த டாப்ஸி பன்னு இந்தியில் 'சாஷ்மி பதூர்' படத்தின் மூலம் அறிமுகமாகி கடந்த ஆண்டு இறுதியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டன்கி படம் வரை பல படங்களில் நடித்துள்ளார்.

ஆடுகளம் முதல் அனபெல் சேதுபதி வரை: "வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா.. வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா" என தனுஷின் 'ஆடுகளம்' படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நடித்த டாப்ஸி அதன் பின்னர் தமிழில் 'வந்தான் வென்றான்', 'காஞ்சனா 2', 'வை ராஜா வை', 'கேம் ஓவர்', 'அனபெல் சேதுபதி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் டாப் ஹீரோயின்: அக்‌ஷய்குமார் நடிப்பில் வெளியான பேபி திரைப்படம் டாப்ஸிக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில், அமிதாப் பச்சனுடன் இணைந்து இவர் நடித்த குயின் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பாலிவுட்டில் பெற்றுத் தந்தது. அதன் பின்னர் உமன் சென்ட்ரிக் படங்களில் அதிகம் கவனம் செலுத்த டாப்ஸியை பெரிய ஹீரோக்கள் கண்டு கொள்ளவே இல்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டன்கி படத்தில் டாப்ஸி நடித்திருந்தார்.

ரகசிய திருமணம்: வெளிநாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை கடந்த மார்ச் 23ம் தேதி ரகசியமாக நடிகை டாப்ஸி திருமணம் செய்து கொண்டார். மீடியாக்களுக்கு புகைப்படங்களை கூட வெளியிடாமல், செம சீக்ரெட்டாக இவரது திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Taapsee Pannu gets tensed after paps follow during her auto ride

ஆட்டோவில் போனாலும் தொல்லை: நேற்று முன் தினம் நடிகை டாப்ஸி தனது தோழியுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது அவரை அடையாளம் கண்டுகொண்ட சில புகைப்படக் கலைஞர்கள் அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து போட்டோக்களை எடுத்தனர். அப்போது ஆட்டோவில் போனாலும் ஆளை விடமாட்றீங்களே என்றும் விபத்தில் சிக்கிடப் போறீங்க பார்த்து போங்க என எச்சரித்துக் கொண்டே டாப்ஸி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

அடுத்தடுத்த படங்கள்: 'ஹோ லட்கி ஹாய் கஹான்', 'ஹசீன் தில்ருபா - 2' மற்றும் 'கெல் கெல் மெயின்' உள்ளிட்ட படங்களில் டாப்ஸி நடித்து வருகிறார். தனது அடுத்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தின் புரமோஷன் பணிகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளார் டாப்ஸி. சினிமா பிரபலங்கள் மும்பையில் வெளியே வந்தாலே பாப்பராஸி எனும் புகைப்படக் கலைஞர்களின் தொல்லை தாங்க முடியவில்லை என பல பிரபலங்கள் தொடர்ந்து புகார் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X