இவர்தான் அந்த காதலர்..வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பிரபல நடிகை..காதலுக்கு ஆதரவு தெரிவித்த குடும்பம்!
சென்னை: தனது காதலர் யார் என்பதை முதன்முறையாக வெளிப்படுத்தி இருக்கிறார், பிரபல ஹீரோயின்.
வெற்றிமாறன் இயக்கிய, ஆடுகளம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் டாப்சி.
தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உட்பட பல படங்களில் நடித்துள்ள டாப்ஸி, மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

ஏகப்பட்ட வாய்ப்புகள்
தெலுங்கிலும் சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள டாப்ஸி, இப்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்த டாப்ஸிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள். அமிதாப்புடன் பிங்க், நாம் ஷபானா, ஜுத்வா 2 , மிஷன் மங்கள், தப்பட் ஆகிய படங்கள் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தன.

காதலிப்பது உண்மை
இப்போது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜின் பயோபிக் உட்பட சில படங்களில் நடித்து வரும் டாப்ஸி வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீரரை காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இதுபற்றி எதுவும் பேசாமல் இருந்த டாப்ஸி, சில வருடங்களுக்கு முன் தான் காதலிப்பது உண்மைதான் என்று கூறியிருந்தார்.

காதலை மறைத்தேன்
‘அவர் நடிகரோ, கிரிக்கெட் வீரரோ இல்லை. இந்த நாட்டைச் சேர்ந்தவரும் இல்லை' என்று கூறியிருந்தார். ஆனால், அவர் யார் என்கிற விவரத்தைச் சொல்லவில்லை. இந்நிலையில் அவர் யார் என்பது தெரியவந்துள்ளது. ஏன் தனது காதலை மறைத்தேன் என்றும் டாப்ஸி இப்போது இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கி யுள்ளார்.

பேட்மின்டன் வீரர்
இந்தப் பேட்டியில் அவருடன் அவர் அம்மாவும் கலந்துகொண்டார். அதில் டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மத்யாஸ் போயே என்பவரை காதலிப்பதை ஒப்புக்கொண்டார் டாப்ஸி. ‘என் காதலை யாரிடமும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. அது பெருமையானதுதான். ஆனால், தலைப்பு செய்திகளுக்காக மட்டும் அதைப் பற்றி பேசவிரும்பவில்லை.

முழுமையாக நம்புகிறோம்
அவரை என் சகோதரி உட்பட குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அதனால் பயனில்லை. என் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அந்த உறவுக்கு அர்த்தமில்லை' என்றார். அவர் அம்மா நிர்மல்ஜீத் கூறும்போது, 'நாங்கள் டாப்ஸியை முழுமையாக நம்புகிறோம். அவர் யாரை தேர்வு செய்தாலும் நாங்கள் ஏற்போம். அவருக்கு ஆதரவு தெரிவிப்போம்' என்றார்.


Click it and Unblock the Notifications











