நெஞ்சே வெடித்தது.. அவ்ளோ கஷ்டப்பட்டு நடிச்சேன்.. கடைசியில எல்லாம் வேஸ்ட்.. டாப்சி புலம்பல்!

சென்னை: டாப்சி நடிப்பில் உருவாகி உள்ள தப்பட் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.

தப்பட் படத்தின் புரொமோஷனுக்காக கடந்த ஒரு வாரமாக நடிகை டாப்சி, பல புரொமோஷன் நிகழ்ச்சிகளில், கலந்து கொண்டும், மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தும் வருகிறார்.

அப்படி ஒரு பேட்டியில், கேட்கப்பட்ட அந்த ஒரு கேள்விக்கு, தனது நெஞ்சே வெடித்தது போல இருந்தது என டாப்ஸி பதில் அளித்துள்ளார்.

ரொம்ப எதிர்பார்த்தேன்

ரொம்ப எதிர்பார்த்தேன்

சுஜித் சர்கார் இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் முதன்முறையாக டாப்சி இணைந்து நடித்த படம் பிங்க். இந்தியளவில் அந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து, பல மொழிகளிலும் ரீமேக் ஆகி வருகிறது. ஆனால், அந்த படத்துக்காக நடிகை டாப்சிக்கு எந்த ஒரு விருதும் கிடைக்க வில்லையாம்.

நெஞ்சே வெடித்தது

நெஞ்சே வெடித்தது

நோ மீன்ஸ் நோ என்ற கான்செப்டை வலியுறுத்தி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கெல்லாம் ஒரு சாட்டையடியாக இருந்த படம் பிங்க். 2016ம் ஆண்டு சிறந்த படத்திற்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. தனக்கும் விருது கிடைக்கும் என நினைத்த டாப்சிக்கு விருது இல்லை என அறிந்ததும் நெஞ்சே வெடித்தது போல இருந்தது என்றார்.

பார்க்கிறவங்களாம் கேட்டாங்க

பார்க்கிறவங்களாம் கேட்டாங்க

மேலும், பிங்க் படத்தை பார்த்தவர்கள், டாப்சியின் நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள். இந்த படத்துக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்றும் கூறினார்கள். ஆனால், அந்த படத்திற்காக ஒரு விருது கூட அவருக்கு கிடைக்கவில்லை என்பதை அறிந்தவர்கள், என்ன உங்களுக்கு விருது கொடுக்கலையா? என ஆச்சர்யமாக கேட்டது மேலும் வேதனையை அளித்தது என்றார்.

இனிமே அப்படி ஆகாது

இனிமே அப்படி ஆகாது

பாலிவுட் சினிமா துறைக்கு வந்த புதுசு, இவ்ளோ பெரிய படம், அப்போ தனக்கான அங்கீகாரம் கிடைக்கலை என்பதற்காக ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனால், அதன் பிறகு, விருதுகளுக்காக இப்படி வருத்தப்படக் கூடாது, நடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். இனிமே எனது நெஞ்சு ஒரு போதும் நொறுங்காது எனக் கூறி சிரித்தார்.

அறையக் கூடாது

அறையக் கூடாது

விலை மாதுவாக இருந்தாலும், விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது என்ற கருத்தை மையப்படுத்தி வெளியான பிங்க், திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது, கட்டிய மனைவியை கை நீட்டி அறையக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் தப்பட் படத்தில் டாப்சி நடித்துள்ளார். இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் உருவாகி உள்ள தப்பட் படம் நாளை திரைக்கு வருகிறது.

கைவசம் நிறைய

கைவசம் நிறைய

பிங்க் படத்திற்கு விருது கிடைக்காததற்கு, வருத்தப்பட்ட டாப்சி, கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. நாளை வெளியாகும் தப்பட் படத்தைத் தொடர்ந்து, ஹசீன் தில்ருபா, ராஷ்மி ராக்கெட், சபாஷ் மித்து மற்றும் ஜெர்மன் படமான ரன் லோரா ரன் படத்தை மையமாக வைத்து உருவாகும் லூப் லபேட்டா என பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X