யானை வெளியே வந்துவிட்டது.. வால் மட்டும் மிச்சம் இருக்கு.. நடிகை டாப்ஸியின் இன்ஸ்டா பதிவு!
சென்னை: உத்தரகாண்டில் நடைபெற்று வந்த ப்ளர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மொழியில் 2010ஆம் ஆண்டு வெளியான ஜுமாண்டி நாடம் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை டாப்ஸி.
அதனை தொடர்ந்து தமிழில் வெளியான ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

பாலிவுட்டில் என்ட்ரி
தமிழில் வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக டாப்ஸி நடிப்பில் கேம் ஓவர் என்ற த்ரில்லர் படம் வெளியானது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக இருந்த டாப்ஸி, சாஷ்டே பதூர் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.

பாலிவுட்டில் டாப் நடிகை
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார். மற்ற மொழிகளை காட்டிலும் பாலிவுட்டில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார் டாப்ஸி. கடைசியாக பாலிவுட்டில் ஹசீன் தில்ரூபா என்ற படத்தில் நடித்திருந்தார் டாப்ஸி.

சிவகார்த்திகேயனுடன் ஏலியன்
தற்போது விஜய் சேதுபதியுடன் அனபெல் சேதுபதி என்ற படத்தில் நடித்துள்ளார் டாப்ஸி. இந்தப் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதனை தொடர்ந்து ஜன கன மன மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஏலியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் டாப்ஸி.

தயாரிப்பாளரான டாப்ஸி
அதேநேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி படத்திலும் படு பிஸியாக உள்ளார். இதனிடையே ப்ளர் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் டாப்ஸி. இந்தப் படத்தில் லீடிங் கதாபாத்திரத்தில் நடிப்பதை தாண்டியும் டாப்ஸி தனது தயாரிப்பு நிறுவனமான அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

முதல் புராஜெக்ட்டாக ப்ளர்
நடிகை டாப்ஸி ஜூலை 15ஆம் தேதி தான் இந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். தயாரிப்பாளராக தனது முதல் புராஜெக்ட் என ப்ளர் படத்தை அறிவித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு உத்தரகாண்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் உத்தரகாண்டில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகை டாப்ஸி அறிவித்துள்ளார்.

வால் மட்டும் உள்ளது
படக் குழுவுடன் எடுத்துள்ள போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள டாப்ஸி, முழு யானையும் வெளியேறியது, வால் மட்டும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உத்தரகாண்டிலேயே படத்தின் பெரும்பாலான காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Recommended Video

ஜூலையில் ஃபர்ஸ்ட் லுக்
கடந்த ஜூலை மாதம் ப்ளர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தார் டாப்ஸி. அவரது கண்களில் இருந்த கையை பின்னால் பிளாக் ட்ராப்பில் இருந்து மற்ற இரண்டு கைகள் பற்றுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ப்ளர் படத்தை அஜய் பால் இயக்குகிறார்.


Click it and Unblock the Notifications











