மாலத்தீவில் ஜாலி கொண்டாட்டம்.. ரணகள பிகினியில் டாப்ஸியின் அதகள போஸ்.. வைரலாகும் போட்டோஸ்!

By

சென்னை: மாலத்தீவுக்கு சென்றுள்ள நடிகை டாப்ஸி, அங்கிருந்து வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழில், ஆடுகளம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி. இதில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.

வெற்றிமாறன் இயக்கிய இந்தப் படத்தைத் தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்த அவர், இந்தியிலும் நடித்து வருகிறார்.

சபாஷ் மித்து

சபாஷ் மித்து

அங்கு அவர் நடித்த, நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2, சூர்மா உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகின. இதனால் அங்கு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் வெளியான தப்பட் படமும் கவனிக்கப்பட்டது. இப்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கைக் கதையான சபாஷ் மித்து படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ராஷ்மி ராக்கெட் உட்பட மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக அனபெல் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் டாப்ஸியும் விஜய் சேதுபதியும் இரண்டு வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது பிரபல இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படம் இது.

மாலத்தீவு

மாலத்தீவு

இதன் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்து வந்தது. அங்கிருந்து நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாயின. கடந்த சில நாட்களுக்கு முன் இதன் ஷூட்டிங் முடிவடைந்தது. இதையடுத்து அங்கிருந்து அவர் வெகேஷனுக்காக, மாலத்தீவுக்குச் சென்றுள்ளார். உடன் அவர் சகோதரி ஷாகனும் சென்றுள்ளார்.

கோடை ஸ்பாட்

கோடை ஸ்பாட்

ஹீரோயின்களின் கோடை ஸ்பாட்டாக மாலத்தீவு இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை மெளனி ராயும் அங்கு சென்றிருந்தார். மாலத்தீவில் இருந்தபடி, நடிகை டாப்ஸி அசத்தல் ஸ்டில்களை தனது இன்ஸ்டாவில் தினமும் பதிவேற்றி வருகிறார்.

 காய்ந்த மரம்

காய்ந்த மரம்

சில நாட்களுக்கு முன் பஞ்சாபி பாடலுக்கு ஸ்டைலாக ஸ்டெப்ஸ் போடும் வீடியோவை பதிவிட்டு இருந்தார். அடுத்து கிளைகள் ஏதுமின்றி காணப்படும் காய்ந்த மரம் ஒன்றில் சாய்ந்தபடி, செம ஸ்டைலான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த போட்டோ வேகமாக பரவியது.

பிகினி உடையில்

பிகினி உடையில்

கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள வலைக்கட்டிலில், பிகினி உடையில் அமர்ந்தபடி அவர் இன்று வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை லட்சக்கணக்கான நெட்டிசன்ஸ் லைக் செய்துள்ளனர். பலர் அவர் அழகையும் பிகினி உடையையும் பாராட்டித் தள்ளியுள்ளனர்.

ஏன் மாலத்தீவு?

ஏன் மாலத்தீவு?

இன்னொருவர், ஏன் எல்லா நடிகைகளும் மாலத்தீவுக்கு போறீங்க? என்று கேட்டுள்ளார். போட்டோ ஏன் இவ்வளவு லாங் ஷாட்டா இருக்கு என்று சிலர் கேட்டுள்ளனர். பலர் அவரிடம் ரிப்ளை பண்ணுமாறும், சிலர் இன்னும் சில பிகினி புகைப்படங்களை வெளியிடுமாறும் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X